தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை பொறுத்தவரை ஆண்டாள் பிரச்சினை முடிவுற்றதாக கருதுவோம் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறியுள்ளார்.

ராஜபாளையத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வைரமுத்து பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வைரமுத்துவுக்கு எதிராக கண்டனப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், எச்.ராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை தரிசித்து மன்னிப்பு கோரினார். தவறிழைப்பது மனித இயல்பு. ஆனால் அவரது இச்செயலை வரவேற்று அவரைப் பொறுத்தவரை இப்பிரச்சினை முடிவுற்றதாக கருதுவோம். இந்து ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு தொடர்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிஜேபி பக்தாள், எச்.ராஜா மூலமாக, மனோஜ்குமார் சோந்தாலியாவிடம் பேசி, தினமணி ஆசிரியர் பதவிக்கு வேட்டு வைக்க முயற்சி எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும், என்பதை தெரிந்து கொண்டவுடன், வீராப்பை எடுத்து, கக்கத்தில் வைத்துக் கொண்டு ஜீயரிடம் மண்டியிட்டார் வைத்தியநாதன்.

கவிஞர் வைரமுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்.ராஜா தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

With Sankar A

பகிர்