பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும் போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 6 ஆண்டுகளாக உயர்த்தப்படாது பேருந்து கட்டணத்தை தற்போது உயர்த்தி உள்ளனர். பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறு இல்லை, காலத்தின் நிலையை கருதி, எரிபொருள் உள்ளிட்டவைகளை மனதில் கொண்டு அநியாயமான முறையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறல்ல என்று பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.. ஆனால் தமிழிசை கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனக் குரல் எழுப்பினார். தமிழகத்தில் ஜனவரி 24ம் தேதி அன்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து, பா.ஜ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பஸ் கட்டண உயர்வை கண்டித்து, பா.ஜ., சார்பில் ஜனவரி 24 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழிசையும், கிருஷ்ணகிரியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஹச். ராஜாவும் ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையாக அதிமுகவை மறைமுகமாக இயக்கிக் கொண்டிருக்கும் பாஜக தமிழகத்தில் பன்முனை வேடம் பூண்டுள்ளது. திமுகவையும் விட்டுக் கொடுக்காமல், அடிமைகள் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் முழுவதும் நம்பாமல், ரஜினி கமலை கைக்குள் போட்டுக் கொண்டு எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு தனது மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்த் சாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார். அங்கு வைரமுத்துவால் தேவதாசி என்று அன்போடு அழைக்கப்பட்ட ‘ஆண்டாளை’ தரிசனம் செய்தார். அவரது கட்சி அலுவலகம் இயங்கும் மண்டபத்தின் பெயரும், பொறியியல் கல்லூரியின் பெயரிலும் ஆண்டாள் வீற்றிருக்கிறாள் என்பது உலகறியும். அப்போது தனது குடும்பம், கட்சி மற்றும் நாட்டு மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்றும் போட்டிக்கு வந்து விட்ட ரஜினி கமல் நாசமாகப் போக வேண்டும் என்றும் ‘அர்ச்சனை’ செய்தார்.
இதையடுத்து கப்சா செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் வைரமுத்து குறித்த தேவதாசி சர்ச்சை பற்றி கூறுகையில் “ஆண்டாள் குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் (ரஜினி மாதிரியே) தனித்து போட்டியிடவுள்ளேன். அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள ரஜினியும் கமலும் எனக்கு ஜூனியர்கள், நான்தான் சீனியர் என்றார். ஆண்டாள் விவகாரத்தை வைத்தே பாஜகவில் இணைந்து தற்போதுள்ள தேமுதிகவை கலைத்துவிட்டு முதல்வர் நாற்காலியில் சூட்கேஸ் உறைத்துணியில் கேப்டன் டிரஸ்சில் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பேன். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்துார் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஜீயருக்கும் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். இது குறித்து வேறு ஒரு பேட்டியில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கூறும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் உயர்வு செய்தபோது அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படவில்லை கஜான நிரம்பி வழிந்தது என்றும் தற்போது திடீர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கனத்த மனதுடன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் புண்பட்ட நெஞ்சை ஆற்றிக் கொள்ள டாஸ்மாக் சரக்கு விலையும் பான்பராக் குட்கா சிகரெட் போன்றவற்றின் விலை குறைக்கப்படும், போக்குவரத்து கட்டண குறைப்புக்கு மட்டும் வாய்ப்பே இல்லை, ஏன்ன அது டெய்லி கலக்ஷனாகும் லிக்விட் கேஷ்” எனவும் கோபமாக கொக்கரித்தார்..
பகிர்