காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது எழுந்து நிற்காமல் தமிழ் மொழியை அவமதித்துவிட்டதாக பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழா தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, மேடையில் அமர்ந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய நிலையில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டு (தியானத்தில்) இருந்தார்.
இந்த தகவல் புகைப்படம் வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது போன்ற சர்ச்சைகள் சங்கரமடத்திற்கு புதிதல்ல. காஞ்சிபுரம் கோவில் நிர்வாகி சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி 2005ஆம் ஆண்டு மடத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டது உண்டு. கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக சிறையில் இருந்த  மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு இந்திய உச்ச நீதி மன்றம் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்த பிற்கு விஜயேந்திரரின் கைது நிகழ்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக முன்பு ஐந்து பேர் சென்னையில் போலீசில் சரணடந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் ஆச்சாரியார் பெயரையும், அவரது அண்ணன் பெயரையும் குறிப்பிட்டனர். கொல்லப்படுவதற்கு முன், காஞ்சி மடம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தவர் சங்கரராமன். காஞ்சி சங்கராச்சாரியார், கடல் தாண்டி,

சீனா செல்லக் கூடாது என்று இவர் வழக்கும் தொடுத்தார். இதையடுத்து ஜெயேந்திர சரஸ்வதியின் சீனப் பயணம் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரராமன் கொல்லப்பட்ட உடனேயே இது தொடர்பில் சங்சராச்சாரியாருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கேள்வி எழுப்பியும், விசாரணைகள் வேண்டும் என்று கோரியும் காஞ்சிபுரம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
கொல்லப்பட்ட சங்கரராமன் சங்கராச்சாரியாருக்கு எழுதியிருந்த கடிதங்களும் தமிழகத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது. பல்வேறு முறைகேடுகளில் சங்கராச்சாரியார் ஈடுபட்டிருப்பதை காட்டும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக சங்கரராமன் அக்கடிதங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனாலேய அவர் சங்கரமடத்தால் “ஸ்வாஹா” பண்ணப்பட்டார். இங்க நெறய பேர் ஆண்டாளை அவமானப்படுத்திட்டாங்கன்னு பிரச்சனை பண்ணிட்டு இருந்தாங்க ஆண்டாளை விட பெரும் மதிப்பு பெற்ற தமிழ் மொழியை அவமான படுத்தியிருக்காங்க இப்போ வந்து பேசுங்க இல்லனா வைரமுத்துவை என்ன சொல்லி திட்டுனீங்களோ அது நீங்க தான்னு நீங்களே ஒத்துக்கொண்ட மாதிரி ஆகிவிடும் என்று பாஜக எதிர்ப்பாளர் ஒருவர் கூட்டத்தில் கிசுகிசுத்ததாக கப்சா நிருபர் தெரிவித்தார்.
நிகழ்ச்சி இறுதியில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் எழுந்து நின்றார். இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை என்றும் அப்போது இடையூறு செய்ததற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் எச்.ராஜா மீதும் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் சங்கர மடத்தின் செய்தி தொடர்பாளர் கூறி அதிர வைத்தார்.
With due Credits: http://www.bbc.com/tamil/highlights/story/2004/11/printable/041115_sankaracharyaarrest.shtml
பகிர்