புதுடெல்லி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதும், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 73 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் இன்ஜினியரிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குவோருக்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டு விருதுக்கு மொத்தம் 15,700 பேர் விண்ணப்பித்திருந்தனர். பிரபலமானவர்களுக்கு மட்டும் பத்ம விருதுகளை வழங்காமல், பிரபலமில்லாத ஹீரோக்களையும், இளையராஜா போன்ற தலித் அரசியல் பொக்கிஷங்களையும் சாதி மத ஓட்டு வங்கிகளை சேர்ந்தவர்களையும் தேர்வு செய்து அவர்களுக்கு பத்ம விருது வழங்கும் நடைமுறையை பிரதமர் மோடி தலைமையிலான காவி அரசு கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி விருதுகளை வழங்கி வருகிறது. வரிந்து கட்டிக் கொண்டு வந்த பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழறிஞர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘எனக்கு மூத்தவர், என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை, ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும், நாடும், தமிழகமும் பெருமை கொள்கிறது’’ என்று தெரிவித்துள்ளார். நேத்தி ராத்திரி யம்மா என்ற கமல்ஹாசனில் கவர்ச்சிப்பாடலை பாடியவர் எஸ். ஜானகி. சில மாதங்களுக்கு முன்பு முதுமையில் தனக்கு கொடுக்கப்பட்ட விருதை எஸ்.ஜானகி வேண்டாம் என்று தூக்கி எறிந்ததை குத்திக் காட்டியுள்ளார் கமல். பதம விருதுகள் வழங்குவதில் எப்போதும் அரசியல் நோக்கம் உள்ளது என்பது மிகத்தெளிவு. இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள விருதுகளில் அரசியல் நோக்கம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு குறிப்பிடுகையில் இந்த வருட பதம்விபூஷன் விருது இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டது தலித் என்பதற்கான காரணிதான் கோணத்தில் என்று கட்டுரை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளையராஜா நேற்று இரவு கப்சா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பத்மவிபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு என்னை கவுரவித்ததாக கருதவில்லை. மூன்று நான்கு திருமணம் செய்து பெண்குலத்தை அவமதித்த என் மகனுக்கு நல்ல தகப்பனாக இருக்கும் என்னையும், தலைக் கனத்துடன் திரையுலகில் பின்னடைவுக்கு சென்ற என்னை உதாரணம் காட்டுவதற்கும், என்னுடன் பல படங்களில் பணியாற்றிய வைரமுத்துவை கடுப்பேற்றவும், தமிழகத்தையும், தமிழ் மக்களையும் என் இரைச்சல் இசையில் இருந்து காப்பாற்றவே என கருதுகிறேன் இது நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று மறைமுகமாக கொடுக்கப்பட்ட அறிவிப்பு.’’ என்று தெரிவித்தார்.