ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு முக்கிய பதவிகள் வழங்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் வேலூரில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக தெரிகிறது. ரஜினி தனது மன்றத்தை மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து வித்யாசமாக வெளிப்படுத்த உள்ளார். நீண்ட நாள் பிரச்சினையான தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் உள்ள பின்னடைவுகளை சரி செய்து அவர்களை உயரிய பதவிகளில் அலங்கரிப்பதாக கூறி ஆசை வார்த்தை கூறி மன்றத்தில் சேர்ப்பதாக தெரிகிறது. ஒவ்வொரு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றமும் ஐந்து லட்சம் உறுப்பினர்களை கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்று மல்டி லெவல் மார்கெட்டிங் முறையில் ரஜினியால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 32 மாவட்டங்களிலும் தலா 5 லட்சம் என்றால் உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சம் அளவுக்கு கொண்டுவர முடியும் என ரஜினி காந்த பகல் கனவு காண்கிறார். இதற்கிடையே புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் போது தலித்துகள், முஸ்லிம்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ரஜினி அறிவுறுத்தி உள்ளார். அனைத்து மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தின் போது தலித்துகளுக்கு இடம் வழங்கப்படுகிறது. தென் சென்னை உறுப்பினரான ஜி.ரவி என்பவர் கூறும் போது ஜன.1 ரஜினி அறிவிப்புக்கு பிறகு நான் மன்றத்தில் சேர்ந்தேன். 10000 பேர் வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்கள். தலைவர் திருமண நாள் வருகிறது அதற்குள் 50000 பேரை பலிகடா ஆக்கி மன்றத்தில் சேர்ப்பதாக தலைமைக்கு உறுது கூறி உள்ளேன் என்றார். நிர்வாகிகள் நியமனத்துக்கு முன்பாக முதல் கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தும் திட்டத்தை ரஜினி கையில் எடுத்துள்ளார். அதிகாரபூர்வமான 30 ஆயிரம் மன்றங்களையும், பதிவு செய்யப்படாத 30 ஆயிரம் மன்றங்களையும் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சி தான் மக்கள் மன்றம். ரசிகர்கள் சந்திப்பின்போது ரஜினி தனது பேச்சில் பொதுமக்கள் அனைவரையும் மன்றத்தில் இணைக்க வேண்டும் என்றார். வீரமும் வியூகமும் போருக்கு முக்கியம் என்றார். அந்த வியூகம் தான் தலித் ஓட்டுக்களை குறிவைத்து பாஜகவுக்கு சொம்பு தூக்குவது. ஆன்மிக அரசியலும் அதுதான். இதை அறிந்த மேலிடம் இளையராஜா என்ற திமிர் பிடித்த தலித் இசை அமைப்பாளருக்கு பத்ம விருது கொடுத்தது போல ரஜினிக்கும் ஒரு பத்ம விருதை பார்சல் செய்து வைத்து இருப்பதாக நம்பத்தகாத பாஜக வட்டாரம் சொல்கிறது. சில நாட்களுக்கு முன்பு ரஜியின் கொள்கை, பாஜகவுடன் ஒத்து போகிறது என்று தமிழிசை அவர்கள் தெரிவித்தார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் ரஜினியும் அதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சங்கிகள் நேரடியாக தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள் வாக்குகளை கைப்பற்ற முடியது என்பது நாம் நன்கு அறிந்த ஒன்று, அதற்கான “B-TEAM” தான் ரஜினி என்பதை நினைவில் வைத்து மக்கள் செயல்படவேண்டும்.
பகிர்