சென்னை: இளையராஜா ஐயர் மாதிரி ஆக முயன்றதாகவும் அதனால்தான் ஆங்கில நாளிதழ் அவர் ஜாதியை குறிப்பிட்டு வன்மம் தீர்த்துக்கொண்டதாகவும், இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜா ஜாதியை குறிப்பிட்டு, அதனால்தான் அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியதாக தலைப்பு செய்தி வெளியிட்டது.
நாடு முழுக்க இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இளையராஜாவின் இசை மதம், ஜாதிகளை கடந்தது என்று ஒரே குரல் நாடு முழுக்க ஒலித்தது. இதனால் அந்த நாளிதழ் மறுநாளே, தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தது.
இந்த நிலையில், நிருபர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் அந்த சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் ஷாக் ரகம். பாரதிராஜா கூறுகையில், இளையராஜாவை சொல்லனும். அவர் ஐயர் மாதிரி ஆகனும்னா? நாம் எந்த மண்ணில் பிறந்தோம் என சொல்வதுதான் சார்
என்னை அடையாளப்படுத்துவது எனது மண், என்னை அடையாளப்படுத்துவது எனது மொழி, எனது ஊர். நீ மூலத்தை மறந்துவிட்டு, புதிதாக வேஷம் போட்டாலே தப்பு. நான் நானாகத்தான் இருப்பேன். ஆன்மீக சிந்தனை வருவது வேறு. வேஷம் போடுவது வேறு என்றார்.
பிச்சையே வினை மிச்சமாய் இட்ட நஞ்சு தேகம் கிடக்கிறேன்..மெச்சுவாய் புகழ் …மெல்ல மலர்தாழ் ஏற்றுவாய்..என பாடுகிறார்….ஒருவன் தன்னை தாழ்வாக இழிபிறவியாக எண்ணிக்கொண்டால் அவனைவிட ..கீழாவன் யாருமில்லை..ராசா.. மீக கீழானவர்….என்னதான் புகழ் திறமை பணமிருந்தாலும்..கொஞ்சமேனும் தன்னை தாழ்த்திக்கொள்ளாமல் உயர்வாக எண்ணவேண்டும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.. அறியாதவன் கேடுக்கெட்டவன்..#சுயமரியாதையற்றவன்_பிணம்…Aalanci Spm
Posted by Mansoor Mohammed on Sunday, January 28, 2018
இதை கேட்ட நிருபர் அதிர்ச்சியடைந்து, இளையராஜா வேஷம் போடுகிறார் என்று கூறுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாரதிராஜா, “எனக்கு தெரியாது, நீங்க அவரை கேளுங்க” என்றார். ஆனால் பாரதிராஜா, இளையராஜாவின், ஆன்மீக நம்பிக்கையை நடிப்பு என மறைமுகமாக குறிப்பிட்டதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.பாரதிராஜா மேலும் கூறுகையில், ஆன்மீகமோ, கூன்மீகமோ எனக்கு கிடையாது. மலையை லவ் பண்றேன், செடியை லவ் பண்றேன், ஆடு, மாடுகளை நேசிக்கிறேன். இதுதான். இதற்கு மேல் ஒன்னும் கடவுள் இல்லை. எல்லாவற்றையும் நேசித்து பார், அதற்கு இணையான ஒன்று கிடையாது. குறிப்பிட்ட இடம் வேண்டும் நம்மை உரிமைப்படுத்த, அதற்குத்தான் கோயில் .உலகம் முழுக்க மதங்கள் உள்ளன. எத்தனை கட்சிகள் உள்ளனவோ அப்படி உள்ளது. மதம் என்பதே சட்டாம்பிள்ளைத்தனம். நமக்கு பிடித்ததை வேறு நபர்களுக்கும் பரப்பி ஏற்றேயாக வேண்டும் என நினைப்பதே மதம். நாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படைதான் மதம். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து தேனியில் நேற்று பேசிய இயக்குனர் பாரதிராஜா, இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான் ஆங்கில பத்திரிக்கை அவருடைய ஜாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக இளையராஜாவை விமர்சித்திருந்தார்.