தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மாநகர பஸ்களில் 3 ரூபாயாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாகவும் அதனுடன் விபத்து காப்பீடு மற்றும் சுங்க வரிக்காக கூடுதலாக 1 ரூபாயும் சேர்த்து 6 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள், குளிர் சாதன பஸ்கள் என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என போராட்டங்களில் இறங்கினர். மேலும், தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, பஸ் கட்டண உயர்வுக்கு தே.மு.தி.க சார்பில் இன்று பல்லாவரத்தில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து இன்றைய தினம் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை சொற்ப அளவில் குறைத்துவிட்டது. இது கண்துடைப்பு என்று கூறிய தேமுதிக இன்று திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வருகை தந்தார். கட்டண உயர்வுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் விஜயகாந்த், ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்துக்குப் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, தனது சட்டை பையில் இருந்து சரக்கடிக்க மனைவி பிரேமலதா கொடுத்த 500 ரூபாயை எடுத்து, தொண்டர்களுக்கும் சேர்த்து அவர் டிக்கெட் எடுத்தார்.
ஆர்கே நகர் தேர்தலின்போது உடல்நலமில்லாமல் இருந்த விஜயகாந்த் மது அருந்தக் கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறி விட்டதால், மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு சரக்கடிக்க கொடுக்கும் ‘பாக்கெட் மணி’யை கணிசமாக குறைத்து கொடுத்துள்ளார். இதனால் கடுப்பாகி போன விஜயகாந்த் தொண்டர்களுள் உள்ள குடிமகன்களை கூட்டு சேர்த்துக் கொண்டு மாநகரப் பேருந்தில் மீனம்பாக்க விமான நிலையத்தில் தனியார் வசம் வழங்கப்பட உள்ள டாஸ்மாக் எலைட் பாருக்கு பேருந்தில் சென்றதாக கப்சா நிருபர் புலனாய்ந்து கண்டறிந்துள்ளார்.
பகிர்