மத்திய அரசின் பட்ஜெட் நாட்டில் நிதி நிலைத்தன்மையை உருவாக்குவதுடன், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

<EP>மத்திய பட்ஜெட் குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:<EP>வேளாண்மை, வேளாண் சார்ந்த துறைக்கு மத்திய பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதை தமிழக அரசு வரவேற்கிறது.

அனைத்து பயிர்களுக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவைப்போல குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு பெரிய பலனளிக்கும். இதை அமல்படுத்துவது மிகப்பெரிய சவாலாகும்.

<EP>மீன்பிடி, மீன் வளர்த்தல் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கால்நடை பராமரிப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஆகியவை வேளாண் சார்ந்த துறையினருக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். இந்த நிதியங்கள், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சொட்டுநீர் பாசனம், பால்வள நிதியம் ஆகியவற்றுடன் சேர்த்து விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என நம்புகிறேன்.

தற்போது ரூ.500 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆபரேஷன் கிரீன்’, ரூ.1,290 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மூங்கில் வளர்ச்சி நிதி ஆகியவை பாராட்டத்தக்கவை. <NO>நீண்டகால பாசன நிதியின் கீழ் ஆயக்கட்டு மேம்பாட்டு பகுதிகளை கொண்டு வந்துள்ள நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

<NO> <EP>மலிவு விலை வீடுகளுக்கு என தனி நிதி உருவாக்கியுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், பிரதமர் வீடு திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூருவைப்போல சென்னை புறநகர் ரயில் திட்ட மேம்பாட்டிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.<EP>தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், மாநில அரசின் திட்டத்துக்கு உதவுவதுடன், நாட்டில் உள்ள ஏழை மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும்.

மாத சம்பளம் பெறும் தனிநபருக்கான வருமான வரி பாரம் குறைக்கப்பட்டால்தான் பொருள் நுகர்வு அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். தனிநபர் வருமானத்தில் ரூ.40 ஆயிரம் நிலைத்த கழிவு என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அது பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைவிட குறைவாகும். <EP><NO>தேசிய சமூக உதவி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால், உயர்த்தப்படவில்லை. ஓய்வூதியம் குறைந்தபட்சம் மாதம் ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும். <NO>ஏழைகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

<EP><NO>பட்ஜெட்டில், வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அதே நேரம்,<NO> பழங்குடியினருக்கான உயர்கல்வி நிதியுதவி. பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் (பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா), திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டம் ஆகிய முக்கியமான திட்டங்களுக்கான நிதி குறைப்பை தவிர்த்திருக்கலாம்.<EP><NO>தற்போது இந்தியா பொருளாதார வளர்ச்சியின் நெருக்கடியான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர், அனைத்து துறைகளுக்கும் சமமான கவனம் செலுத்தி, வளர்ச்சி அடிப்படையிலான பட்ஜெட்டை அளித்துள்ளார்.<NO> இந்த பட்ஜெட் நாட்டின் நிதி நிலைத்தன்மையை உருவாக்குவதுடன், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

பகிர்