நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோயிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அம்மனுக்கு, சுடிதார் போன்று அலங்காரம் செய்த அர்ச்சகர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகைக்கு, தனி சன்னதி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தை வெள்ளி தினத்தனத்தையொட்டி, அம்மனுக்கு ராஜ் என்ற அர்ச்சகர் பூஜை செய்தார். மாலையில் நடந்த சந்தன அலங்காரத்தின் போது, அம்மனுக்கு சுடிதார் போன்ற உடை அணிவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை பக்தர்கள் சிலர் செல்போனில் படம் எடுத்ததால், தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த மக்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, ஆலய கலாச்சாரத்தை கொச்சைப் படுத்தும் விதமாக, அம்மனுக்கு சுடிதார் போன்ற அலங்காரம் செய்ததால் அர்ச்சகர் ராஜ், திருவாவடுதுறை ஆதீனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து குருக்களிடம் விளக்கம் கேட்டதற்கு, அம்மன் என் கனவில் வந்து சுடிதார் அலங்காரம் செய்ய சொன்னதாக கூறியிருக்கிறார். இதை ஒத்துக்கொள்ளாத திருவாடுதுறை ஆதினம் இரண்டு குருக்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த அர்ச்சகர் ராஜ், நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன் ஆண்டார் தேவதாசி என்று வைரமுத்து கூறினார். சடகோப ராமானுஜ ஜீயர் எனக்கு சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று சொன்னார். எனவே நாங்களும் எங்கள் கோவில் அதுபோல் பிரபலமாக எண்ணி, ஒரு மைலேஜ் கிடைக்கும் என்று தான் சுடிதார் அலங்காரம் செய்தொம். இது தெய்வ குத்தமல்ல. இது சக்சஸ் ஆனால், தொடர்ச்சியாக பிரபலமடையாத கோவில்களில் முருகன் சிலைகளுக்கு கோவணத்திற்கு பதில் பட்டாபட்டி டிர்வுசர், சிவனுக்கு புலித்தோல் போல் கிழிந்து தொங்கும் டெனிம் ஜீன்ஸ் என்று போய்க் கொண்டே இருந்திருப்போம். ஆனால் ஆதினம் எங்களை பணி நீக்கம் செய்து விட்டது. ஆண்டால் விவகாரத்தில் வைரமுத்துவை தாகத வார்த்தைகளால் திட்டிய ஆண்ட்டி எனக்கு பிடித்து போய் விட்டது. நேற்றிரவு தான் நித்தி (நித்யானந்தா) போன் போட்டு தங்கள் ‘ஆ’ சிரமத்தில் வந்து சேர்ந்து கொள்ளச் சொன்னார். என ‘குஜால்’ தான். என்றார். இந்து கோவில்களை பற்றி துரும்பு அசைந்தாலும் டை அடித்த மீசை துடிக்கும் எச். ராஜா அளிக்காத பேட்டியில், “இந்த அர்ச்சகர் இருவரும் பஞ்சாப் வழியே பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்” என்றார்.
பகிர்