ரஜினி கமல் இருவரும் மத்திய அரசை விமர்சனம் செய்வதில்லை மாறாக மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்வதோடு மாநிலத்தில் இதுவரை ஆண்ட கட்சிகளால் மாநிலமே கெட்டுகுட்டிச்சுவரானதைப்போல ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பமுயல்கிறார்கள் ..
ஒருவர் நேரடியாக ஆன்மீகம் என்றும் மற்றொருவர் நாத்திகர் போர்வையிலும் வருகிறார்கள்.. அரிதாரம் பூசிய இருவரின் செயல்களும் தங்களை உத்தமர்போல் காட்டுகிற தோரணையை பொய்யால் ஆனதென்பதை ..மறந்து போகிறார்கள்..
இவர்களின் முகமூடி கிழிந்து உண்மை சொரூபம் வெளியே தெரிகிறது..
..
முதலில் இதற்குமுன் தமிழகத்தை ஆண்டவர்களின் செயல்பாடுகள்பற்றி பார்ப்போம்.. ஆரம்பகால காங்கிரஸ் ஆட்சியென்பது தேசியநீரோட்டத்தோடு பிணைந்ததென்றாலும்
முழுக்க முழுக்க பார்பனர்களின் ஆதிக்கம் மட்டுமே செல்லுபடியானது அவர்களை மீறி எதையும் செய்யமுடியாத சூழல் தான் இருந்தது.. நல்லாட்சி என்பதன் பொருள் அப்போதெல்லாம் வலுத்தவர்களின் செல்வாக்கை மேம்படுத்துதல் ஒன்றே குறிக்கோளாக இருந்தது அதையும் மீறி சில திட்டங்களின் பலன் சாமானியனுக்கு கிடைத்தது..ஆனால் முழுமையான அங்கீகாரம் என்பது எட்டாகனியாகவே இருந்தது கல்வி வேலைவாய்ப்புகளில் நம்மவர்களின் பங்கு மிக மிக குறைவு..
..
பார்பன ஆதிக்கத்திலிருந்து அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டி காமராஜரை பெரியார் முன்னிறுத்தினார் அவரும் கல்வி சமூகமேம்பாடு போன்றவற்றில் அதிகவனம் செலுத்தினாலும் அது திராவிட ஆட்சியின் தொடக்கமாக கொள்ளவேண்டும் .. ஆனால் முழுஅளவிலான பங்களிப்பு கிடைக்க வழக்கம் போல் நிறைய இடையூறுகள் இருந்தன .. அண்ணாவின் ஆட்சி திராவிடத்தின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமென்றாலும் அவருக்கு காலம் வாய்ப்பை வழங்கவில்லை.. அதன் பின் பொறுப்பேற்ற கலைஞர் ஆட்சியென்பது ..சமநிலையை நோக்கியதாக பயணித்தது.. அவரது திட்டங்கள் தொலைநோக்கை கொண்டிருந்தது பகுத்தறிவு பகலவன் பெரியாரை தாங்கி நின்றது.. ஆனால் வழக்கம் போல் பாசிசம் தன் சூழ்ச்சிவலையை கையிலெடுத்து கவர்ச்சியை அரிதாரத்தை நம்பி எம்ஜிஆரை கொண்டுவந்தது எப்போதும் சட்டென்று உணர்ச்சிவயபடும் தமிழனின் பலவீனத்தையும் சட்டென்று நம்பிவிடும் அவன் இயல்பையும் பயன்படுத்தி திராவிட அரசியலுக்கு அல்லது திராவிட செயல்பாட்டிற்கு தடைபோட நினைத்தது சிலவற்றை செய்தாலும்… திராவிடத்தை மறந்த அல்லது ஒதுக்கி ..எம்ஜிஆராலோ பின் வந்த ஜெயலலிதாவாலோ இங்கே நிற்கமுடியாதென்பதை உணர்த்தியது..
திராவிட ஆட்சியென்றாலே கலைஞரின் ஆட்சியை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.. அவரின் திட்டங்கள் இன்று இந்தியாவிற்கே தேவைபடுகிறது.. சமகால அரசியலின் புதிய ஆத்திசூடியை வகுத்து தந்திருக்கிறார் .. அதை பின்பற்றினால் மட்டுமே இந்தியா மிளிருமென காலம் கடந்து தெரிந்திருக்கிறது காலமெல்லாம் எதிர்த்து வந்த சித்தாந்தவாதிகள் வேறுவழியின்றி கலைஞரின் பழைய பாடதிட்டத்தை மொழிபெயர்க்கிறார்கள்/ புதுப்பித்து வெளியிடுறார்கள் ..
..
இன்று முகமூடி அணிந்துவரும் நடிகர்கள் முதலில் அரசியலை கற்றுக்ககொள்ளட்டும்.. தமிழகம் தாழ்ந்து போனதைப்போல பேசி திரிவதை முதலில் விடவேண்டும்.. ஜெயலலிதா மற்றும் எடப்பாடி அரசு காலம் தந்த படிப்பினை ..
பணம்,பொய் பிரச்சாரம்,ஊடகங்களின் தொடர் ஆதரவு இவை செய்த அலங்கோலத்தை அவசரகதியில் நம்பியதன் விளைவு ..எதையும் சீர்தூக்கி பார்த்து ஆய்ந்தறியாமல் சட்டென்று நம்பியதன் விளைவு மிகப்பெரிய விலையை தரவேண்டியதாயிற்று .. இனியும் முகமூடி அணிந்துவரும் இந்த அரிதார புருஷர்களை நம்பி அவர்களின் கவர்ந்திழுக்கும் பேச்சில் நடை உடை பாவனையில் விழுந்துவிடாமல்.. சாதி மத அரசியலை முன்னெடுப்போரின் பினாமிகள் இவர்களென்பதை உணர்ந்து கொள்ள இவர்களின் மௌனம் நமக்கு உணர்த்துகிறது ..
..
யார் இவர்கள் இவர்களின் நோக்கமென்ன என்பதும்.. திராவிட அரசியலுக்கு எதிராக பாசிச சிந்தனை கொண்ட ஆரியர்களின் மறுஉருவமாய் . கவர்ந்திழுக்கும் முகமூடியோடு வலம் வருகிறார்கள்… இனத்தின் மீதான மொழி கலாச்சார பண்பாட்டு மீதான மறைமுக தாக்குதலுக்கு இவர்கள் அரிதாரம் பூசி மக்கள் முன் நடிக்க வருகிறார்கள்.. வெள்ளித்திரை புறக்கணிக்கும் காலத்தில் வெளித்திரையில் வந்து இவர்கள் வேசம் கட்டுகிறார்கள்..

Aalanci Spm
ஆலஞ்சியார்

பகிர்