ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, ஹிந்தி மொழியை அறவே நீக்குகிறோம் என்று 1968 பிப்ரவரி 23 -இல், அண்ணா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டதன் பொன்விழா ஆண்டில், உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்குக் கிடைக்கப் போகும் இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையைத் தருவதாகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சோனியா காந்தியை வலியுறுத்தி, முதல்வராக இருந்த கருணாநிதி தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார். ஒன்று முதல் 10 -ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம் என தமிழ்நாடு தமிழ்க் கற்றல் சட்டத்தை அவர் நிறைவேற்றிக் காட்டினார்.
இந்தப் பின்னணியில், தமிழ் மொழி வளர்ச்சி – ஆராய்ச்சிப் பணியில் திமுகவின் அடுத்த பங்களிப்பாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு ரூ.1 கோடியை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நமது கப்ஸா நிருபரிடம் பேசிய ஸ்டாலின் 2-ஜி மூலம் 1.76 கோடி வந்ததது. மோடி புண்ணியத்தால் அந்த கேசும் பூட்ட கேஸ் ஆயிருச்சு, அந்த .76 லட்சம் கோடியில் இருந்து ஒரே ஒரு கோடி ஹார்வார்டு தமிழ் இருக்கைக்காக கொடுத்தேன், இதை பெரிது படுத்த வேண்டாம் என்றார்.

பகிர்