சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம்..
..
மூன்றுமுறை மக்களால் தேர்தெடுக்கபட்டு அதில் இரண்டுமுறை உச்சநீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்து வரலாற்றில் தீராத களங்கத்தை ஏற்படுத்தியவர் சில குமாரசாமிகளால் விடுதலை செய்யபட்டு ஆட்சியில் மீண்டும் வர இந்திய நீதியின் மீதான மரியாதையை நம்பகதன்மையை கேலிகுரியதாக்கியது.. எது நீதி என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது..பணமும் பதவியும்.. நூலும், உயர்மட்ட செல்வாக்குமிருந்தால் எதையும் செய்யலாமென்ற நிலையை ஏற்படுத்தி கடைசிகட்ட நம்பிக்கையான நீதிமன்றங்கள் மீது எரிச்சலை தந்தது .. நீண்டகால சட்ட போராட்டத்தில் எவ்வளவு சலுகைகளை பெற முடியுமோ அவ்வளவையும் பெற்று என்ன செய்துவிட முடியும் இந்த நீதிமன்றங்களால் என எகத்தாளமிட்டு செயல்பட்டவந்தவரை உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் கொஞ்சம் கூட குறைக்காமல் குற்றவாளிகளென ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் நால்வரின் தண்டனையை உறுதி செய்தது..
ஜெயலலிதா திருடியது உண்மை .. மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது கூட்டு சதியென குற்றம் சாட்டபட்ட அனைத்திலும் தண்டனை பெற்றவர்.. ஏற்கனவே டான்சி வழக்கைப்போல சொத்தை திருப்பி அரசாங்கத்திற்கே தந்துவிடுகிறேன் என சொல்லி மன்னித்து விடுதலையாகவில்லை..மாறாக கடுமையான தண்டனையை வழங்கி ₹100 கோடி அபராதமும் நான்காண்டு சிறையும் விதித்தது..
..
அக்யூஸ்ட் நம்பர் 1..
ஜெயலலிதா என்ற தனிநபரோடு நமக்கு எப்போதுமே வெறுப்பு இருந்ததில்லை அதனால் தான் நீ..ஆள கூடாதென்றுதான் சொன்னோமே தவிர..வாழ கூடாதென சொல்லவில்லையென எழுதமுடிந்தது.. ஆனால் அரசியல் ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் பொதுவாழ்விற்கான குறைந்தபட்ச தகுதியை கூட இழந்தவர் யார் வேண்டுமானாலும் வரலாமென்ற ஜனநாயகத்தின் ஈரத்தை தமக்கு சாதகமாக்கி நேர்மையான வழியில் வராமல் இலைமறைவு அரசியலின் மூலம் வந்தவர் ஆனால் காலப்போக்கில் தம்மை செப்பனிட்டுகொண்டு முன்னேறாமல் தவறுகளின் உற்பத்திசாலையாகவே இருந்தார் ..
கோபமும் ஆத்திரமும் காழ்ப்புணர்ச்சியும் தெளிவற்ற சிந்தனையும் மற்றவர்களை தாழ்வாக எண்ணும் பாசிச நினைப்பும் அவரோடு இருந்தது இளமைகாலங்களில் அவர் மீது தொடுக்கபட்ட தாக்குதல்களின் ரணம் ஆராத காயங்களின் வலி அவர்கள் அரசியல் வாழ்வின் நெடுக தெரிந்தது.. ஆனால் பொதுவாழ்வின் சாதக பாதகங்களை அறிந்திருந்தும் அதன் எதிர்திசையிலேயே பயணித்தவர் ஆணவம் திமிர் இரண்டும் அவரை சுயபரிசோதனை செய்துக்கொள்ளவே இல்லை.. தன் பிறப்பு அரசியல் சதுரங்கத்தில் தம்மை காப்பாற்றும் என நம்பினார் அதனால் தான் அவரால் தொடர்ந்து தவறிழைத்த போதும் நம்மை எதுவும் செய்யமுடியாதென நினைத்தார் நீதி காத்திருந்து வெல்லும் என்பதை மறந்தார்
..
சரி…
ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தை அலங்கரிக்கலாமா என்ற கேள்வி நம்முன் வருகிறது மூன்றுமுறை மக்களாலும்..இரண்டுமுறை நீதிமன்ற தண்டனையை தொடர்ந்து விரைந்து வழக்கிய முறைகேடாலும் முதல்வராக இருந்தவர் மரபின்படி அவரின் புகைபடம் வைப்பதில் தவறில்லையென தோன்றும் ஆனால் வரலாற்றில் அது மிக மோசமான முன்னுதாரணத்தை கொண்டுவரும்.. ஆம் இன்றைக்கு கோட்சே சிலையை நிறுவ வேண்டுமென சொல்கிறார்களே அதேபோல நாளை எப்படிபட்ட குற்றவாளியாக இருந்தாலும் இறந்துபோனால் அவரை புனிதராகக்க நினைக்க தோன்றும்.. இன்றைக்கு அவரை புகழ்ந்தும் மூச்சுவிடாமல் உச்சரித்துக்கொண்டிருப்பவர்கள் நாளை பதவி போனபிறகு யாரிந்த ஜெயலலிதாவென கேட்பார்கள் இவர்களின் ஆதரவென்பது ஆட்சி பதவி அதிகாரத்தின் மீதான ஆசையேயன்றி நிஜமான பாசமில்லை.. அதோடு அவர்களும் அறிவார்கள் ஜெயலலிதா கிரிமினலென்று நேற்றுவரை சசிகலாவை சின்னம்மா என்ற உதடு ஜெயிலுக்கு சென்றவுடன் திருடி என சொல்லவில்லையா நாளை இவர்களின் ஆட்சி பதவி போனால் ஜெயாவையும் பலே திருடி என சொல்வார்கள்..
தவறான முன்னுதாரணத்தை தொடங்கி வைத்தல் மிகமோசமான விளைவுகளுக்கு வித்திடுதல் போல.. சட்டமன்ற வரலாற்றில் மாபெரும் இழுக்கு
ஜெயலலிதா படத்தை வைக்கும் போது தயை கூர்ந்து அண்ணா காமராஜர் படத்தை அகற்றிவிடுங்கள்..
சிலர் அறிவிலிகள் நாட்டை ஆண்ட ஜெயலலிதாவின் படத்தை திறப்பதில் என்ன தவறென்கிறார்கள்.. நாட்டை கொள்ளையடித்தவரென உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியவரென்பதை மறந்து போகிறார்கள் ..வெட்கம் அவமானம்..
நாட்டின் அவமானசின்னமாய் இருக்கவேண்டுமென்றால்.. அவரது படத்தை திறக்கலாம்..
அவர் படத்திற்கு
கீழே இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் போதே தண்டிக்கபட்ட முதல்வர் .. என்று எழுதுங்கள் வரும் தலைமுறை தெரிந்துக்கொள்ளட்டும்.

Aalanci Spm
ஆலஞ்சியார்

பகிர்