வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீசாகும் தனது ‘காலா’ படத்தை புரமோட் செய்ய, நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுதும் போலி அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். முதல் கட்டமாக அரசு விதிகளுக்கு எதிராக தெருவுக்கு தெரு பேனர் வைக்க ரசிகர்களுடன் தொடாமல் நின்று போட்டோ செஷன் நடத்தினார். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து தற்போது, தமிழகம் முழுதும் வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா
.

இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. படத்தின் பெயர் ‘காலா’ என்று தெரிந்த உடனே, இந்தப் படத்துக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், `காலா திரைப்படம் கபாலியில் காட்டிய போலி மலேசிய தீவிரவாதி போல் மும்பைவாழ் திருநெல்வேலி மக்களின் டுபாக்கூர் கதைக்களம்’’ என்று தெரிவித்திருந்தார். ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காலா படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்துவந்தன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 பட ரிலீஸுக்குப் பின்னரே, காலா ரிலீஸ் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், 2.0 படத்தில் குழந்தைகளுக்கான பொம்மை கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், அதற்காகக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து, காலா படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கின.
இந்தநிலையில், காலா படம் வரும் ஏப்ரல் 27-ல் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளரான தனுஷ், இதை சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். “காலா மற்றும் 2.0 விளம்பரம் வேலை முடிந்ததும் இமயமலையோ சிங்கப்பூரோ. ஆண்டவன் சொல்றான். சொட்டை தலையன் கேட்கிறான்.” என்றார் ஒரு வயது முதிர்ந்த ரசினி ரசிகர். இந்நிலையில் மற்றொரு நிஜ வாழ்க்கை நடிகர் கமல் மதுரையில் நடக்கவுள்ள முதல் அரசியல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்துள்ளார். முன்னதாக வரும் 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக தெரிவித்த அவர், அன்றைய தினமே மதுரையில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். அரசரடி பகுதியில் உள்ள யூசி மைதானத்தை மாநாட்டிற்கு தேர்வு செய்துள்ளார். இதில் சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என கமல் ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பார்க்கின்றனர். இந்த நிகழ்வை பல்ஸ் பார்த்துவிட்டு டாக்டர் சொன்னபடி ஏப்ரலில் காலா 2.0 ரிலீசுக்கு பிறகு வைகோ பாணியில் ‘காலா’ற நடைபயணம் மேற்கொள்ள ரஜினி திட்டமிட்டுள்ளார். கமல் மாநாடு சொதப்பினால் மீண்டும் இமயமலைக்கே செல்லவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது