டெல்லி டால்கொட்டரா அரங்கில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வது பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான தமிழ் மொழி சமஸ்கிருத்த்தை விட மிகவும் தொன்மையானது என்பது தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர், தமிழ் பாசுரங்களை பாடிய ஆண்டாளை ‘தேவதாசி’ என்று கூறிய கிறித்தவர் வைரமுத்து, பேசியே தமிழக மக்களை சுரண்டி காற்றை வைத்து 2ஜி ஊழல் செய்த கலைஞர் குடும்பம், கம்பராமாயணத்தை இயற்றிய சேக்கிழார் என்று கூறிய டெட்பாடி போன்ற சிலருக்கு மட்டும்தான் தெரியும் என்று குறிப்பிட்டார். மிகவும் இனிமையான, அழகான தமிழ் மொழியில் தம்மால் பேச முடியவில்லை என்று வருத்தப்படுவதாகவும், விரைவில் கருணா, ஜெயாவுக்கு பேச்சுப் பயிற்சி அளித்தவர்களிடம் டியூஷன் வைக்கப் போவதாகவும் கூறினார். வணக்கம் என்பதை ‘வண்க்க்கம்’ என்று சொல்ல மட்டுமே தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார். மாணவர்களிடையே சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாற்றிய பிரதமர், நாடு முழுவதும் இருக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு உரையின் இறுதியில் இவ்வாறு கூறினார். இன்று இங்கு கூடியிருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மொழியில் பேச முடியாததை நினைத்து வருந்துகிறேன், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.

தனது தேர்வுக்கு 125 கோடி மக்களின் ஆசீர்வாதம் தன்னுடன் இருப்பதுதான் தன்னுடைய வலிமை என்றும், அந்த நம்பிக்கையிலேயே தான் மேலும் நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு ரேட் பேசி விற்க அயராது பாடுபட்டு, தீய வழிகளில் செயல்படுவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் தமிழுணர்ச்சிக்கு தமிழிசை தான் காரணம் என்று நம்பத்தகாத செய்தி கூறுகிறது. இது தமிழகத்தில் உள்ள சமஸ்கிருத கிராஸ் பெல்டுகளுக்கு (பூணல்) கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக எஸ்.வீ.சேகர் ஆண்டாள் குறித்த சர்ச்சை, ரஜினியின் ஆன்மிக அரசியல் போன்றவற்றைப் பற்றி காட்டமான கருத்துக்களை பேசி வந்தார். சமஸ்கிருதத்திற்கு எதிரான மோதியின் கருத்து குறித்து அளிக்காத பேட்டியில் கூறியதாவது: “சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஒலிகளுக்குச் சக்தி இருக்கிறது. அதனால்தான் சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. மந்திரங்களை ஓதி முடித்ததும், சாமி கும்பிட வருபவர்கள் சம்ஸ்கிருதத்தில்தான் கும்பிட வேண்டும். சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையானது என்று மோதி பேசியது எனது நண்பர் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை அவமதிக்கும் செயல். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காததை மறைமுகமாக திராவிட கட்சிகளை ஆதரித்து, பாஜக கொள்கைக்கு எதிராக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.