நான் கோபப்பட்டால் நிறைய உண்மைகள் வெளிவரும். ஜெயலலிதா என்னை தினகரன் உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று கூறினார். என்னை தோற்கடிக்க பெரிய குளத்தில் பெரிய முயற்சி செய்தார்கள். சசிகலா கொடுத்த தொல்லைகள்..
வேறு யாராவது இருந்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டு இருக்கும்.
பிரதமரை நான் சந்தித்த போது உங்களை பற்றி ஜெயலலிதா நல்ல முறையில் கூறியுள்ளார்கள். ஆகவே நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக அதிமுக வில் செய்யுங்கள் என்று என்னிடம் கூறினார்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு மோடியின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் பொறுப்பை ஏற்றேன்..
..
மானம் மரியாதை சூடு சொரணையற்றவர் தானென அவரே சொல்லிக்கொள்கிறார்.. தனக்கென்று மானம் மரியாதை ஏதுமில்லை என்று வெளிப்படையாகவே சொல்கிறார்..
தினகரனை ஒட்டுமொத்த முக்குலத்தோரின் பிரதிநிதியாக வரவிடகூடாதென்பதற்காக கடும் முயற்சி எடுப்பது வெளிப்படையாகவே தெரிகிறது ஆனால் சொந்த தொகுதியில் கூட மரியாதை கிடைக்குமா என கேள்வி எழுகிறது..
..
சசிகலா குடும்பம் தான் முப்பதாண்டுகளாக அதிமுகவை இயக்கியது என்கிற உண்மையை இப்போதுதான் வெளியிடுகிறார் இது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் சில நடுநிலைகள் .. ஜெயலலிதாவை மிக பிரமாண்டமாக உயர்த்தி பிடித்து இரும்பு பெண்மணி என்றெல்லாம் பேசி அவரை கண்டால் எல்லோரும் நடுங்குவார்களென ஒரு மாய பிம்பத்தை கட்டிவைத்திருந்தார்கள் ..பாவம் இவையெல்லாம் சசிகலா எனும் கம்பீரத்தின் பின்னால் ஒளிந்திருந்தவர் என்று போட்டுடைத்திருக்கிறார்.. சாதிபாசமோ..
உண்மையில் ஒருவகையில் பன்னீர் சொல்வது சரிதான்.. ஜெயலலிதாவை சந்திக்கவே விடாமல் மிக சாமர்த்தியமாக கட்சிகாரர்களை தடைந்து எதை பேசவேண்டும் எப்படி பேசவேண்டுமென்று கூட (குனிந்து கும்பிட்டு விழுந்து ) சசிகலாதான் சொல்லி அதையே நடைமுறைபடுத்தியிருக்கிறார்.. கட்சியின் எந்த முடிவானாலும் சசியை தவிர யாரிடமும் ஆலோசித்ததாக யாருமே இதுவரை சொன்னதே இல்லை அதிலிருந்து மறைந்திருந்து இயக்கியவர் சசிகலாதான் என்பது தெளிவு.. வேட்பாளர் தேர்விலிருந்து செலவு எவ்வளவு செய்யவேண்டும் என்பது கூட சசிகலாவின் மேற்பார்வையில் தான் நடந்தது .. ஜெயலலிதா ஒரு டம்மி பீஸ் என்று சாட்சியம் சொல்கிறார் பன்னீர்..
..
அதிமுகவை பாஜகவில் அடகுவைத்தது பன்னீர்தானே தவிர சசிகலாவோ அவரது குடும்பமோ அல்ல .. தலைமை பதவிக்கு ஆசை வந்து பன்னீரை விலக சொல்லாமல் இருந்திருந்தால் .. சசிகலா காலில் விழுவதை அங்குள்ள யாரும் தவறாக எண்ணியிருக்க மாட்டார்கள் .. பதவியை பறித்தவுடன் சில குருபார்வையில் விழுந்து எப்படியும் மீட்டுவிடலாமென்றிருந்ததை கூவத்தூரில் அடைத்து .. பன்னீரை செயலிழக்க செய்ததும் .. வேறுவழியின்றி சிறைசெல்ல வேண்டியிருந்ததால் எடப்பாடியை முதல்வராக்கியதும் பன்னீர் மானத்தை விட்டு எடப்பாடியோடு கரம் சேர்ந்திருக்கிறாரே தவிர.. அதிமுகவினர் யாரும் அவரை விரும்பவில்லை என்பதும்.. பெரியகுளத்தில் அல்ல இனி எந்த குளத்தில் குளித்தாலும் கரை சேர முடியாது என்பதால் எனக்கு கோபம் வந்தால் நிறைய உண்மைகள் வெளிவருமென மிரட்டிபார்க்கிறார்.. இதுவரை எந்த உண்மையையும் வெளியில் சொன்னதே இல்லை இந்த சொரணைகெட்டவர்..
..
தர்மயுத்தம்..?செய்து உண்மையை சொல்வேனென்று சொல்லி பதவி கிடைத்தவுடன் பல்லிளித்தாயிற்று.. இப்போது தினகரன் புதிய நிபந்தனைகளை வித்ப்பதால் அதாவது சில அமைச்சர்களை அதாவது பன்னீர் உட்பட சிலரை வீட்டுக்கு அனுப்பினால் அரசு தப்பிக்கும் என சொல்வதால் பொங்க வருகிறார்.
இந்த முறை பொங்காது.. பன்னீர் பச்சைதண்ணீர்.. கோபம் ரோசமே அதெல்லாம் மானமுள்ள மறவனுக்குரியது சொரணையற்றவருக்கில்லை..
..
ஒருவகையில் உண்மையும் கூட..
ஜெயலலிதாவை இதைவிட கேவலபடுத்த முடியாது .. சசிகலா தான் எல்லாம் நாங்களெல்லாம் அவரின் அடிமைகள்.. வெளியே ஜெயலலிதாவை கும்பிட்டு நடித்தோமே தவிர உண்மையான பயம் சசிகலாவிடம் தானிருந்ததென ஒட்டுமொத்த அடிமைகளுக்கும் சேர்த்து இவர் ஒப்புதல் வாக்குமூலம் செய்திருக்கிறார்..
..
#பன்னீர்_கோழை ..
..
Aalanci Spm