கமல்..
மிக சிறந்த கலைஞன் எதையும் ஆய்ந்தறிந்து சினிமாவில் எந்த வடிவில் தந்தால் எத்தனை வடிவாய் தந்தால் மக்கள் ரசிப்பார்களென அறிந்தவர்.. ஆனால் பாருங்கள் அவரின் ரசிகர்வட்டம் மேதாவிதனமானவர்கள் என்றழைக்கபடுகிறவர்கள்.. உயர் ரசிப்புதன்மை
உடையோரென நம்பவைக்கபட்டவர்கள்..
பாமரத்தனமான ரசிகர்கள் அவரிடம் இல்லை..அல்லது அனைத்துதரப்பினரையும் மகிழ்விக்கும் வித்தை அறிந்திரவில்லை அது அவரின் கடின உழைப்பில் மிக சிரத்தையோடு
அதிக கற்றுணர்ந்து அதை சரியாக வெளிபடுத்திய படங்கள் மிகபெரிய தோல்வியை சந்தித்தன.. அதாவது அவரை நம்பி பணம் போட்டவர்கள் பரிதாபமானார்கள் .. அவர் எப்போதும் போல் அடுத்தபடத்தில் நடிக்க தொடங்கிவிடுவார்.. அதிக பொருட்செலவில்லாத படங்களை தனது பேனரில் வெளியிட்டு பணம் ஈட்டுவார்.. கமலின் நடிப்பின் மீதோ கலை சினிமா மீதான ஈடுபாடு மீதோ சந்தேகம் வராது ஆனால் அவரின் படங்கள் பொருளாதார ரீதியில் பெரியளவு வசூலை செய்ததில்லை செய்திருந்தால் அவர்தான் சூப்பர்ஸ்டார்..
..
சிலர் எதையும் தெளிவாக கற்ற பிறகே களம் இறங்குவார்.. எந்தவொரு படமானாலும் மிக தெளிவான அறிவோடு தான் எடுப்பார் எல்லாம் சரி ஆனால் அவர் சினிமா ரசிகர்களின் ரசனை எதுவென்பதை அவர்களின் நாடிதுடிப்பை .. சினிமா விரும்பிகளின் எண்ணவோட்டத்தை அறிந்தவராக இருந்தால் தொடர்ந்து அவரது படங்கள் ஏன் தோல்வியை தழுவுகிறது ..சினிமா தெரிந்த அவருக்கு ரசிகர்களை எடைபோட முடியவில்லை .. அதேதான் அரசியலும் அவரது அறிவு .. அரசியலை கற்று பலரிடம் ஆலோசனை கேட்டு எதை எப்படி செய்வதென முடிவுக்குவரலாம் ஆனால் அரசியல் விமர்சகர்களோ ஆலோசனை கூறுபவர்களோ மக்களின் மனநிலையை அறிந்தவர்கள் இல்லை.. இவை சரியென்று சொன்னாலும் மக்கள் ஏற்கவேண்டும் ரசிகர்களை மட்டுமே நம்பி வந்தால் மிக மோசமான தோல்வியை தான் தழுவநேரிடும் ..எனக்கு கமலை மிகவும் பிடிக்குமென்பதற்காக அவருக்கு என் ஆதரவு கிடைக்குமென்பது இல்லை.. 
..
ஏழரை கோடி மக்களை நம்பிதான் அரசியலில் குதிக்கிறேன் என்கிறார்.. அதுசரி அந்த எழரை கோடிக்காக இதுவரை செய்ததென்ன.. எதாவது போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீரா.. அல்லது சமகால அரசியலில் புரிதலோடு கூடிய நகர்வை செய்திருக்கிறீரா.. மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றி எதேனும் தெரியுமா.. ஊழலற்ற அரசு என்கிற தாங்கள் ஜெயலலிதா தண்டிக்கபட்டபோது உண்ணாவிரதமிருந்தீரே அது ஏன்.. இத்தனை காலம் தமிழக மக்கள் பட்ட இன்னல்களுக்கெல்லாம் வாய்மூடி இருந்ததேன்.. திடீரென ஒருநாளில் சினிமா வாய்ப்புகள் மங்க தொடங்கும் காலத்தில் இனி நம் சினிமாவை வாங்க ஆளில்லை என்றானபின் அரசியலை தேர்வு செய்வதற்கு பெயரென்ன இது மக்களை இளிச்சவாயர்கள் என்ற நினைப்பை தவிர வேறென்ன.. சினிமா மோகம் வெகுவாக மக்களிடத்தில் குறைந்துவிட்டது எழுபதுகளில் இருந்த ஈர்ப்பு இப்போதெல்லாம் இல்லை சினிமா எனும் மாயை விலகி அது ஒரு கனவு தொழில் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்..
சினிமாவை தியேட்டரை விட்டுவெளியேறிய பிறகு மறக்கிற நிலை இப்போது பிடித்தால் பார்ப்போம் இல்லையெனில் விட்டுதள்ளு எனகிற சரியான சிந்தனையை/ தெளிவை பெற்றிருக்கிறார்கள்..
..
யாருக்காக வருகிறாரென்பது மெல்ல வெளிவருகிறது.. ராஜாஜிக்கு பிறகு வராது வந்த மாமணி என அய்யங்கராத்து மாமியை கொண்டுவந்தார்கள்.. அப்போது அதற்கு மகோரா மேனன் பயன்பட்டார்.. இப்போது அவர்களுக்கான இடம் காலியாக இருப்பதால் முயற்சிக்கிறார்கள்.. ஆனால் காலம் தாழ்ந்த முடிவு.. காலவதியான காலத்தில் இனி தேறாதென்கிற நிலைதான்.. மிக சாதூர்யமாக காய்நகர்த்தி வெளிகொணரலாமென்ற அவர்களது திட்டம் அம்பலமாகிப்போனது.. அதனால் தான் கடைசியில் திராவிடமில்லாமலா என கதைக்க தொடங்கியிருக்கிறார்.. இங்கே மானமிகு சத்யராஜின் குரலை வரவேற்கிறேன்.. நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கள்.. இல்லையெனில் இழப்பு எங்களுக்கில்லை உங்களுக்குதான் அதாவது மக்களுக்குதான் .. எம்.ஆர்.ராதாவை நினைபடுத்தினார்..
ஆம் அரிதாரம் கலைந்தால் கட்டிய வேசமும் போகும்.. அவ்வளவுதான்.
..
வாலறுந்த பட்டம் வானில் பறக்காது..
Aalanci Spm

பகிர்