நடிகர் ரஜினிகாந்தை வைத்து அவரது மகள் சௌந்தர்யா இயக்கிய பொம்மைபடம் ‘கோச்சடையான்’ படத்துக்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை 3 மாதத்தில் திருப்பிக் கொடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை வைத்து அவரது இளைய மகள் சௌந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற 3 டி அனிமேஷன் படத்தை இயக்கினார். 2014 மே மாதம் படம் வெளியானது. மிகப் பெரிய பொருட்செலவில் தயாரான தரமற்ற அனிமேஷன் படத்திற்கு ரஜினி படத்திற்கு அளிக்கும் வரவேற்பை ரசிகர்கள் அளிக்காததால் படம் தோல்வி அடைந்தது. பொதைகை டிவியில் வரும் பொம்மலாட்டம் போல் இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதனால் படம் தயாரித்தவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்தப் படத்தை விநியோகம் செய்ததில் லதா ரஜினிகந்த் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆட் பீரோ தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர் புகார் மனு அளித்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஆட் பீரோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி லதா ரஜினிக்கு சில கேள்விகளை வைத்தார். வாங்கிய பணத்தை ஏன் திருப்பித் தரவில்லை? எப்போது கொடுப்பீர்கள் என்று இன்றே பதிலளிக்க வேண்டும். பணத்தை திருப்பித் தராவிட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து, மதியத்திற்கு மேல் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார். மதியத்திற்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்த போது 12 வாரங்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 3 மாதத்திற்குள் பணத்தை திருப்பித் தர உத்தரவிட்டது. அப்போது நீதிபதியிடம் அழுது புலம்பிய லதா, “மை லார்ட், ஆட்சியை பிடிச்ச பின்னால்தான் எல்லா கடனையும் வாடகை பாக்கியையும் அடைக்க முடியும், என் கணவர் ரஜினி காந்த் தற்போது சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ளார். அவர் அரசியலில் கால் பதித்து சுருட்டல் ஸ்டாராக, தமிழக முதல்வர் ஆனதும் சிஸ்டம் சரியாகிவுடும், சிஸ்டம் சரியானவுடன் கடனை வட்டியும் முதலுமாக செலுத்திவிடுவோம். அதுவரை எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கண்ணீர் வடித்தார்.