தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்போன் சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பெரும்பாலான டவர்கள் இயங்காததால், ‘சிக்னல்’ கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் செல்போன் மூலம் மற்றவர்களிடம் பேச முடியாமலும், அழைப்புகளை ஏற்க முடியாமலும் பொதுமக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். செல்போன் மூலம் முக்கிய தகவல்கள், அவசர செய்திகள் பரிமாறப்படும் சூழ்நிலையில், ‘ஏர்செல்’ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள ஏர்செல் மையங்களுக்கு பொதுமக்கள் சென்று முறையிட்டனர். எனினும் முறையான விளக்கம் கிடைக்காததால் ஊழியர்களுடன் வாக்குவாதமும் நடந்தது. 2-வது நாளாக முடங்கிய ஏர்செல் நிறுவன சேவை  அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் ஏர்செல் வேலை செய்யாததால் மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மூடப்பட்டிருக்கும் அலுவலகத்தின் மீது கற்களை வீசி வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
முடங்கி உள்ள ஏர்செல் சேவை, சரியாக 4 நாட்கள் ஆகும் என தென் இந்திய தலைமை செயல் அதிகாரி,  பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு, கூடிய விரைவில் மாறுவதற்கான போர்ட் எண் கிடைக்கும், ஏர்செல் திவால் என்பது பாதி சரி, பாதி தவறு, கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது. ஏர்செல் மேக்சில் ஊழல் வழக்கில் லம்ப்பாக பணம் சுருட்டிய மாறன் சகோதரர்கள், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திடம் கைமாத்து கேட்டுள்ளோம்.  ‘கைமாத்து’ வாங்கி கடனை அடைத்தவுடன் ஏர்செல் சேவை மீண்டும் செயல்படும் இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு என்பது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர், சென்னையின் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்து, அதற்குக் கைமாறாக மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து சன் டிடிஎச் (சன் டைரக்ட்) நிறுவனம் 599 கோடி ரூபாய் முறைகேடாக முதலீடு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
Bharath’s Kadaisi Bench Karthi Movie New Year Wishes Poster

இம்முறைகேடு தொடர்பாக நடுவண் புலனாய்வுச் செயலகம் குற்றவழக்கு பதிவு செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. 2ஜி ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ரூ.1,700 கோடி மோசடி செய்ததாக, கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி கலாநிதி மாறனுக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது. ஏர்செல் – மேக்சிஸ் பங்கு பரி வர்த்தனை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தயாரித்த குறிப்புகள் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்டதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் 2006-ம் ஆண்டு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் வாயிலாக பல நிறுவனங்களுக்கு நிதி திரட்ட அனுமதி அளித்தது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமாக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள பல இடங்களில் கடந்த மாதம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள வீட்டிலிருந்து ஏர்செல் – மேக்சிஸ் பங்கு பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் ஏர்செல் – மேக்சிஸ் நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தயாரித்த குறிப்புகளை ஒத்து இருப்பதாக தெரிவித்துள்ள சி.பி.ஐ., இந்த ஆவணங்கள் ப. சிதம்பரத்தின் வீட்டிற்கு எப்படி சென்றது என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி வருவதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். கப்சா நிருபர் கிடுக்கிப்பிடி கேள்விக்கு பதில் அளிக்க முடியாத ஏர்செல் அதிகாரி, இவர்களிடமிருந்து பணம் வந்தவுடன் கடன் அடைப்போம், கடன் அடைக்கும் போது பணம் வரும் என்று சிக்னல் கிடைக்காத செல்போன் போன் மனநிலை பிறழ்ன்ற தலைமை தேர்தல் அதிகாரி ஏர்செல் அலுவலகத்தில் விட்டத்தை பார்த்து சிரித்தார்.

பகிர்