ராமேஸ்வரம்: அப்துல்கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல்ஹாசனை, கலாமின் பேரன சலீம் வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றார். நடிகர் கமல்ஹாசன் கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசி பெற்றார். தங்களின் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு கலாமின் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கலாமின் பேரன் வழங்கினார். அப்துல்கலாம் வீட்டிற்கு கமல் சென்றிருப்பதை முன்னிட்டு அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். முன்னதாக கமல் கலாம் படித்த பள்ளிக்கு சென்று பார்வையிட உள்ளதாகவும் தனது பயணத்திட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், பள்ளிக்கு கலாம் செல்வதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இப்படி முத்தக் கலை மாமன்னன் காதல் இளவரசன் கலைஞானி கமல் ஹாசன், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு வருகை தந்தால் மாணவர்கள் ஒழுக்கம் கெட்டுப் போய் விடுவார்கள் என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது. என்றார். இதை வெளிக்காட்டிக் கொள்ளாத கமல், சினிமாவில் நடிக்கும்போது பாத்திரமாக வாழ்ந்தார் என்று கூறுவதும், நிஜவாழ்வில் இருக்கும் போது நடிக்கிறார் என்று கூறுவது சகஜம் என்று தன் பாணியில் கூறிவிட்டு, பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு காரில் விரைந்து சென்றார்