கமல் ஹாஸன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் கமல் ஹாஸன். “இந்தச் சின்னத்தை உற்றுப் பார்த்தால், அந்தக் கொடியில் இருக்கும் 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலத்தைக் குறிக்கும். நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும்,” என்று கமல் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் கர்நாடகம் என ஆறு மாறுநிலங்கள் உள்ளன. மராட்டிய மாநிலமும் தன்னை வட மாநிலம் என சொல்லிக் கொள்வதில்லை. தென் மாநிலங்களுள் ஒன்றாகவே தன்னைக் கருதுவதாகத் தெரிவித்துள்ள

து. இந்த ஆறு மாநிலங்கள்தான் இந்தியாவின் பெரும்பான்மை நிதி ஆதாரமாகத் திகழ்கின்றன. குறிப்பாக மராட்டியமும் தமிழகமும் இந்தியாவின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட பாதி பங்களிப்பைத் தருகின்றன. எனவே தென் மாநிலங்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டால், மத்திய அரசிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது நீண்ட காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்து. இதனை வலியுறுத்தி கமல் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. கமலின் கட்சியின் கொடியில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் எதை உணர்த்துகிறது என்று பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.
தற்போது கமல் அதன் அர்த்தத்தை விளக்கியுள்ளார். கமல்ஹாசன்

ஆரம்பத்திலிருந்தே தான் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்த போதிலிருந்தே அவர் இடதுசாரி தலைவர்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது முகம் கம்யூனிஸமாக இருக்கலாம் என்ற பேச்சு நிலவியது. எனினும் அவர் திராவிடக் கட்சியைச் சேர்ந்த கருணாநிதியையும் சந்தித்தார். இதனால் அந்த யூகத்தில் குழப்பம் நிலவியது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள கட்சியின் கொடியில் 3 ஜோடி சிவப்பு கைகளும், 3 ஜோடி வெள்ளை கைகளும் நடுவே கருப்பு வளையத்தில் வெள்ளை கைகளும் ஜோடியாக உள்ளன. இதை பார்க்கும் சிவப்பு நிறம் என்பது தொழிலாளர்கள் வர்க்கத்தினரும், வெள்ளை நிறம் என்பது முதலாளித்துவத்தையும் குறிக்கிறது. இந்த இருவரும் இணைந்து சமமாக செயல்பட வேண்டும் என்பதையே இந்த கொடி குறிப்பதாக இருந்ததாக பல்வேறு யூகங்கள் இருந்தன. இந்த நிகழ்ச்சியின் போது கமல் தனது கட்சியின் சின்னம் குறித்து பேசுகையில், இடது சாரியும் இல்லை வல

து சாரியும் இல்லை. அதுதான் நடுவில் மய்யம் என கட்சியின் பெயரில் வைத்துள்ளேன். கொடியை உற்றுப்பார்த்தால் தென்னிந்தியா மேப் தெரியும். 6 கைகள் 6 மாநிலங்களை குறிக்கும். 6 முனை நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களின் நீதியை மய்யமாக தோன்றிய கட்சி இது என்றார் கமல்ஹாசன். ஆனால் நமது உங்கள் நியூஸ் லே-அவுட் கப்சா ஆர்டிஸ்ட் புலனாய்ந்து கமல் கட்சி சின்னம் குறித்து சில விளக்கங்களை தருகிறார்.
அந்த 3 கைகள் பற்றிக் கொண்டிருப்பதன் குறியீடுகளை மய்யமாக விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு முதலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். பிறகு ஆறு மாநிலங்களின் கஜானாவைக் கைப்பற்றுவோம். என்று அர்த்தம் என்றார். அப்போ ரேகா சரிகா கவுதமி ன்னு அர்த்தம் இல்லையாண்ணா என்றார் அப்பாவி பியூன். வயதான பிறகு, நிலா கூட இல்லாமல் வெறும் நட்சத்திரம் மட்டும் இருக்கும் இருட்டில் பயமாக இருந்தால் கையைப் பிடிச்சுகிட்டு நடங்க என்பதும் ஒரு குறியீ

டு. பிரியாணி பொட்டலமும் குவார்ட்டரும் கொடுத்து கூட்டம் கூட்ட மாட்டேன் என்றார் கமல் ஒரு கை மற்றொரு கையை பிடித்துக் கொண்டிருப்பதால் சரக்கடிக்க முடியாது என்றும் பொருள் படும். என்னதான் பகுத்தறிவு புண்ணாக்கு பேசினாலும் கடைசியில் விஷ்ணு யந்திரத்தின் ஆறு பட்டை டிசைனில் சின்னம் அமைத்துள்ளார் கமல். நாராயணா ஆரக்கிள், விஷ்ணு யந்த்ரா, முருகன் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஆப் டேவிட் என கூகிளில் தேடினால் இந்த சின்னம் ஒரு இந்து மத குறியீ
டு என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஐயங்கார்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமக்கட்டியின் வெண்மை மற்றும் சிவப்பு நிறமும் தவறாது இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் கமல் என்ற ‘தாமரை’ சந்தேகமில்லாமல் பாஜக கைக்கூலி என்று புலனாகிறது. ஆங்கிலத்தில் கட்சி பெயரை மொழி பெயர்த்தால் Peoples Justice Party (PJP) அதாவது பாஜக பி டீம் என்றும் தெரிகிறது. பார்த்திபனின் மனித நேய மன்றம் என்ற அமைப்பு 20 ஆண்டுகளாக

 செயல்பட்டு வருகிறது. அதை காப்பி அடித்து சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கூகிளில் தேடியபோது “HANDY chains performing some occult summoning” என்ற பதம் கண்ணில் பட்டது. இல்லுமினாட்டிகள், சூனியக்காரர்கள் கெட்ட காரியங்களை கடத்துவதற்கு கையை இது போல் கோர்த்துக் கொள்வார்கள்” என்று அதிரடியாக முடித்தார் கப்சா ஆர்ட்டிஸ்ட்.
பகிர்