வங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நிரவ் மோடியின், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மீதான விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ள அதிகாரிகள், நிரவ் மோடிக்கு சொந்தமான விலை உயர்ந்த 9 ஆடம்பர கார்களை இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், நிரவ் மோடியின் 100 கோடி மதிப்புள்ள சொத்துகள், பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உள்ளிட்டவற்றையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடி குறித்து சி.பி.ஐ-யிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. மோசடியில் ஈடுபட்டதாக வங்கி அதிகாரிகள் மீதும், நிரவ் மோடி மற்றும் அவரின் மனைவி மற்றும் சகோதர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிரவ் மோடி பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கப்ஸா நிருபர் தெரிவிக்கும்போது நீரவ் மோடியின் ரேஷன் கார்டை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , அவரும் அவரது குடும்பத்தினரும் ரேஷன் அரிசி வாங்க முடியாமல் அவதிப்பட்டு சரணடைவார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பகிர்