யாரும் எதிர்பார்க்காத நிலையில் அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையில், தொடங்கி விட்டார்.
அரசியலுக்கு வருவார் என இரு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னும் கட்சி துவங்காமல் இழுத்தடித்து வருவது தனது திரைப்பட ரிலீசுக்காகத்தானா என்ற குட்டு வெளிப்பட்டுள்ளது. ரஜினி நடிப்பில் எந்திரன் 2வது பாகமும், காலா திரைப்படமும் வெளியாக வேண்டியுள்ளது. இன்று கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. இவ்வாண்டில் இப்படங்கள் ரிலீஸ் ஆகும். அதற்கு முன்பாக அரசியலில், அதிரடியாக ஏதாவது செய்தால், படங்களுக்கு பாதிப்பு வருமோ என ரஜினிகாந்த் யோசிப்பதாக கூறப்படுகிறது.
எனவே, கட்சியை வலுப்படுத்துவதாக கூறியபடி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தபடி போக்குக் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தபோது, கூறியதாவது:எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தரவேண்டாம். மற்றவர்கள் (கமல்) சத்தம் போடட்டும், படத்தில் முத்தம் போடட்டும், நாம் (நம் பட) வேலையை பார்ப்போம்..” பின்னர் மக்கள் நீதி மய்யம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். “கமல் கட்சி ஆரம்பிப்பது ரொம்ப சந்தோஷம். நீண்ட பயணம் இது. நாம் அனைவரும் சேர்ந்துதான் பயணம் செய்யப் போகிறோம். உங்கள் சந்தோஷம்தான் எனக்கு மகிழ்ச்சி. உங்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிறது கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருக்கவேண்டும். 32 மாடி கட்டிடத்தை (கர்நாடகாவில் வாங்கிய இடத்தில்) கட்டி வருகிறேன். அதன் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். ஷங்கர் படத்தில் வாங்கிய சம்பளத்தில் ஷங்கர் சிமெண்ட் வாங்கி கொடுத்துள்ளேன். கட்டமைப்பு சரியாக இருந்தால் தான் தேர்தலில் தோற்றாலும் கட்சி நீடிக்கும். தோத்திடுவேன் என பயமாக இருக்கிறது.  நாம் அமைதியாக இருந்து நமது சினிமா வேலையைப் பார்ப்போம். விரைவில் ஒவ்வொரு மாவட்டமாக வந்து ரசிகர்களை சந்தித்து டிக்கட் விற்பேன்” என்றார். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்கு பின் தமிழக அரசியலில் இறங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேச ஆரம்பிக்க அது விவாதமாக மாற அவரும் அரசியலில் இறங்குவேன் என்று அறிவித்தார்.
நடிகர் விஷாலும் அரசியலில் குதிப்பேன் என்று தெரிவித்தார் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மூக்குடைபட்டார். ரஜினிகாந்த ரஜினி மக்கள் மன்றம் என்று ஆரம்பித்து அதற்கு நிர்வாகிகளை நியமித்து மாவட்டவாரியாக ரசிகர்களை சந்தித்து வந்தார். ஆனால் அதற்குள் நடிகர் கமல் தனது கட்சியின் பெயர், நிர்வாகிகளை அறிவித்து தனது அரசியல் கட்சியையும் தொடங்கிவிட்டார். முதலில் கட்சி ஆரம்பிப்பேன் என்று அறிவித்திருந்த ரஜினிகாந்த் இன்று ‘ஜகா’ வாங்குவதாக திடீரென அறிவித்துள்ளார். அதன் பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் காவிரி பிரச்சனைப்பற்றி கேட்டபோது சிரித்தப்படியே பதில் சொல்லாமல் சென்றார். கோபமடைந்த வயது முதிர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்று கூறியே 20 வருடம் ஆகி விட்டது. நீ லேட்டா வருவியா அல்லது லேட் ரஜினிகாந்தாக பாடையில் போகும்போது அரசியலுக்கு வருவியா தலைவா!” என்று கப்சா நிருபரிடம் அழுது புலம்பினார்.
பகிர்