தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு (24-02-18) 70-வது பிறந்தநாள். இதை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்த அ.தி.மு.க தலைமை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அது 7 அடி உயரம் கொண்ட வெண்கலச் சிலையாகும். முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சிலையைத் திறந்தனர். அ.தி.மு.க தொண்டர்களின் “அம்மா…அம்மா” கோஷத்திற்கு மத்தியில் சிலைத்திறப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில், சிலையின் முக அமைப்பு ஜெயலலிதா போல் இல்லையென்று விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. ஜெயலலிதா சிலை பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன. அ.தி.மு.க தொண்டர்களிடம்கூட அதுபற்றிய அதிருப்தி காணப்படுகிறது. “தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு அருகே கம்பீரமாக நிற்க வேண்டிய தலைவியின் சிலையை மோசமாகத் தயாரித்து அவருக்கு அவமானத்தைத் தேடித்தந்திருப்பதாகக் குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். வேண்டுமென்றே அவமானப்படுத்தி விட்டார்கள் என்று கொந்தளிப்பவர்களையும் பார்க்க முடிகிறது. என்னடா இது ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கனும் சொல்லிட்டு வளர்மதிக்கு சிலை வச்சிருக்காங்க, நமக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா.. என கேட்கிறார் ஒரு கப்சா நெட்டிசன். என்னது இப்பவே சசிகலாவுக்கு சிலையா என்றும் சிலர் கேட்கின்றனர். ஜெயலலிதா ன்னு ஒரு போர்டுல எழுதி கழுத்துல தொங்க விட்டா பிரச்னை தீர்ந்தது என்றும் விமர்சிக்கின்றனர். ஜெயலலிதா சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் உலவும் சர்ச்சை குறித்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஜெயலலிதா சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுவதா?. அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் சிலை தான் என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் ஏற்கின்றனர். மனசாட்சி இல்லாத மிருகங்கள் தான் ஜெயலலிதாவின் புதிய சிலையை விமர்சிக்கும் என்றும் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிக்கும் அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கும் இடையில் சமீப காலங்களாக உரசல்கள் அதிகமாகிக் கொண்டே வந்தது. அ.தி.மு.கவில் சீனியராக வளர்மதி இருப்பதால், பாண்டியராஜனால் எதிர்த்துப் பேச முடியாத நிலை ஏற்படும்’ என்பதை உணர்ந்தே, பா.வளர்மதிக்கு அந்தப் பதவியைக் கொடுத்துள்ளனர்.  அதிரடி திருப்பமாக தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வரும் எனக்கு தமிழக அரசு பெரியார் விருது வழங்கி கௌரவித்து உள்ளது. அந்தவகையில் சென்ற ஆண்டுக்கான விருது பெற்றேன். முதல்வரால் வழங்கப்படும். விருது மூலம் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் கொடுத்தார்கள். அதுதவிர, இவ்விழாவில் வாழ்நாள் முழுவதும் மாத உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 பெற அரசாணைகள் அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்கள். ஆனால் எனக்கு கட்சி அலுவலக வளாகத்திலேயே எம்.ஜி.ஆர். சிலைக்கு பக்கத்தில் கம்பீரமாக சிலை நிறுவி அம்மா பிறந்தநாளன்று திக்குமுக்காட வைத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி கூற என்றென்றும் கடமை பட்டுள்ளேன்.” என்றார்
பகிர்