திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகிழ்ச்சியுடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி உயிரிழந்ததையடுத்து அவரது உடல் 3 நாட்களுக்குப் பிறகு மும்பை கொண்டுவரப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் ஓட்டலில் தங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஸ்ரீதேவி உயிரிழந்து 3 நாட்களான நிலையில் அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு போலீஸ் விசாரணை முடிந்து எம்பாமிங் செய்யப்பட்டு இன்று போனி கபூரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆரம்பத்தில், மராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹோட்டல் குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் நினைவு தவறி விழுந்து இறந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. மேலும், அவரது உடலில் மது கலந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், குளியல் தொட்டியில் நினைவு தவறி விழுந்து இறந்ததாக அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு 9 மணியளவில் அவரது உடல் மும்பை கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், ஸ்ரீதேவி உடல் கொண்டு வரப்படுவதற்கு இரண்டு நாட்களாகவே, பல்வேறு மொழி திரையுலக பிரபலங்கள், அனில் கபூரின் வீட்டுக்கு சென்று, ஸ்ரீதேவியின் மகள்கள் இருவருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்றிரவு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் மும்பை சென்று துக்கம் விசாரித்தனர். அதன்பின் இன்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் விழுப்புரத்தில் தலித் குடும்பம் மீதான தாக்குதல் மற்றும் சிறுவன் படுகொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “இச்சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. அதற்கு ஆவண செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு”, என கூறினார்.
மேலும், சம்பள பாக்கி குறித்து கௌதமி எழுப்பிய விவகாரத்திற்கு பதிலளித்த கமல்ஹாசன், ”நடிகை கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால், அதனை என் நிறுவன அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்”, ஸ்ரீதேவி என்னுடன் லிவிங்டுகெதரில் வாழ்ந்திருந்தால், இப்படி அல்பாயுசில் போக விட்டிருக்க மாட்டேன். அவரது பாப்புலாரிட்டியை வைத்து மத்திய அரசியலில் காரியம் சாதித்து, பிரதமர் மோடிக்கே ‘டஃப்’ கொடுத்திருப்பேன். போனி கபூருக்கு ஸ்ரீதேவியை வைத்து போணி பண்ணத் தெரியவில்லை” என கூறினார். ஸ்ரீஇதேவி மரணம் குறித்த கேள்விக்கு, “அவருடைய குழந்தைகளை பார்த்து ஆறுதல் கூற சென்றேன். இறந்தவர்களை பற்றி இனி கவலைதான் பட முடியும். அவரது மரணம் குறித்து பேசுவது கஷ்டமாக உள்ளது. நீங்கள் (ஊடகங்கள்) பேசுங்கள்”, என கூறினார். சண்டிகரில் தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் மர்ம மரணம் குறித்து பேசிய அவர், “மாணவர்களுக்கு தற்கொலை செய்யக்கூடாது என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்”, என தெரிவித்தார். அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த கமல் ஹாசன் ஏன் அப்துல் கலாம் இறுது ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு தான் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதில்லை என பதிலளித்தார். இப்போது ஸ்ரீதேவி இறுதி சடங்கிற்கு சென்றது ஏன் என்ற கேள்விக்கு ஊர்வலம் தான் பிடிக்காது இறுதி சடங்கு பிடிக்கும் என்று பல்லிளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கொடுமையான கொலை மற்றும் பலாத்கார சம்பவம் குறித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் முன்னணி அரசியல் தலைவர்கள் யாரும் வாய் திறக்காதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் அரசியல்வாதிகளாக விஸ்வரூபம் எடுத்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இதுபற்றி பேட்டியோ, அல்லது சமூக ஊடகங்களில் கருத்தோ தெரிவிக்கவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக முன்னணி அரசியல் தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.  ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்கிறார், கமல்ஹாசன் மாற்றம் மக்களிடம் இருந்து வர வேண்டும் என்கிறார். சிஸ்டமும் கெட்டு, மாற்றமும் இல்லாமல் காட்டுமிராண்டி தனமாக ஒரு தாக்குதல் நடந்துள்ள நிலையில், இதை பற்றி அவர்கள் முன்வந்து கருத்து கூறியிருக்க வேண்டாமா? என்பது தலையாய கேள்வியாக இருக்கிறது. பதினாறு வயதினிலே மயிலு செத்துவிட்டது. பரட்டையும் சப்பாணியும் இன்னும் உயிருடன் இருந்து என்ன பிரயோஜனம் என நெட்டின்கள் கேள்வி மீம் போட்டு கலாய்க்கின்றனர்.
பகிர்