திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த டிஎஸ்பி பாண்டியன் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சப்புகார் நிலுவையில் இருந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக, கடந்த 2006ஆம் ஆண்டு பாண்டியன் நியமிக்கப்பட்டார். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்து, முகப்பேர் வீட்டு வசதி வாரியத்தில் தலா 2 கிரௌண்டு இடம் வாங்கி அதனை வீட்டு வசதி வாரியத்தின் விதிமுறைகளுக்குப் புறம்பாக இவர்கள், அந்த இடத்தைத் தனியாருக்கு விற்று லாபம் அடைந்ததோடு வாரியத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

பாண்டியனுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் 4,800 சதுர அடி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணத்தை ஒரே தவணையில் பாண்டியன் கட்டியதால் பிரச்னை எழுந்தது. சமூக ஆர்வலர் செல்வராஜ் என்பவர் பாண்டியன் ஒரே தவணையில் பணம் செலுத்தியது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து கடந்த 2011ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், டிஎஸ்பி பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் இன்று பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருப்பதால் பாண்டியனை சஸ்பெண்ட் செய்யுமாறு போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இது குறித்து காவல் துறை வட்டார கப்சா கான்ஸ்டபிள் ஒருவர் கூறும்போது, வசூல்ராஜா படத்தில் வருவது போல் துடிப்பற்று, அதிமுகவை நையாண்டி செய்யக் கூட முடியாத, கழுத்தில் துளை இட்டு ட்ராக்கியஸ்டமி செய்து கொண்ட கருணாநிதியால் அதிமுகவிற்கோ, அடிமை அமைச்சர்களுக்கோ ஆபத்தில்லை என்பதால் லஞ்சப் புகாரை தூண்டி விட்டு கருணாநிதியை கொசுக்கடியிலும், ஈ மொய்ப்பதிலும் ஈடுபடுத்தி துன்புறுத்துகிறோம். இது வழக்கமான ஒன்றுதான்” என்றார். “எவ்வளவு நேர்மை பார்த்தீர்களா? பழிவாங்குது வழக்கமான ஒன்றுதான் என்பதை ஒப்பு கொண்டு விட்டார்கள் அதிமுக ஆட்சியில் 2012 லேயே கலைஞரின் பாதுகாப்பு அதிகாரி மீது வழக்கு பதிவு செய்தும் அதனை இந்த ஆறு வருட காலத்தில் நிரூபிக்க இயலாத லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் ஓய்வு பெறும் நாளில் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது அதிமுக அரசின் அவலத்தை காட்டுகிறது. வெட்க கேடு”. என்கிறார் நமது உங்கள் நியூஸ் பெர்சனல் செக்யூரிட்டி தாத்தா.

பகிர்