காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்திற்கு போட்டியாக, காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க, கர்நாடகாவில் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை, வருகிற 7ம் தேதி அம்மாநில முதல்வர் சித்தராமையா கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள், காவிரி படுகையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என, சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காவிரி தீர்ப்புக்கு கர்நாடகா அரசு வரவேற்பு தெரிவித்திருந்தாலும், மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற பிரதமரை நேரில் வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் தமிழக அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகளுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அடைக்க வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 7ம் தேதி கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை முதல்வரை ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். நாளை நடைபெற உள்ள சந்திப்பில் காவிரி தண்ணீர் போலல்லாமல் வற்றாத ஜீவநதியாக ஓடும் டாஸ்மாக் எலைட் பாரில் இருந்து ஸ்பெஷல் சரக்குகள் பயன்படுத்தப்படும் என்றும், அதற்கு கூவத்தூர் ரிசார்ட் அனுபவம் மிகவும் கைகொடுக்கும் என்றும், காவிரி தண்ணீர் பற்றி விவாதிக்க ‘வாங்க பழகலாம்’ என ஸ்டாலினை மெகா தண்ணி பார்ட்டிக்கு எடப்பாடி அழைத்ததாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள கப்சா செய்திக் குறிப்பு கூறுகிறது. முன்னதாக தமிழகத்தில் 100 மடங்கு அளவிற்கு பேருந்து கட்டணம் உயர்த்தபட்ட பொழுது “ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கும்போது அவருடன் அமர்ந்து டீ குடித்தேன். அவரது பதவி பறிபோனது.

திருவள்ளூரில் தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தைக் கண்டித்து திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது அப்போது ஒரு பதினைந்து நிமிடம் உட்கார்ந்து டீ கொடுங்க என கேட்டு குடித்துவிட்டுதான் வந்தேன். ஓபிஎஸை பார்த்து சிரித்ததற்கே அவரது பதவி பறிபோனது” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். “இரண்டாயிரம் பேருந்துகள் வாங்கத் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த ஸ்டாலின் அதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். பின்னர் ஜெயலலிதா என்ற ஏ1 குற்றவாளியின் படம் சட்டசபையில் திறக்கப்பட்டபோது இருவருக்கும் எதிராக பொங்கினார்.. நிர்வாகத் திறமையில்லாத காரணத்தினால்தான், எடப்பாடி அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கண்ட மேனிக்கு பாஜக பேச்சை கேட்டு ஆடுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளது. நாளைக்கு தண்ணி பார்ட்டி நடக்கப் போகிறது எடப்பாடி மற்றும் பன்னீர்சல்வம் இவர்களது நிலைமை என்னவென்று எனக்கு தெரியவில்லை. அவரது பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக ஏற்கனவே ஒரு முறை காத்திருந்து டீ குடித்தேன் என்றும் .தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் காத்திருந்து டாஸ்மாக் சரக்கு குடிக்கப் போகிறேன்.. ஸ்டாலின் கூறினார். அவரது இந்த பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்