பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி ஆய்வு செய்தார். அப்போது, சாதாரண உடையில் சசிகலா இருந்ததாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டு சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்கள் சிறையை விட்டு காற்றாட வாக்கிங், ஷாப்பிங் போகும் வீடியோ காட்சிகளை முன்னதாக அங்கு பணியில் இருந்த நடிகை மற்றும் டி.ஐ.ஜி. ரூபா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது இந்த வண்ண உடை விஷயம் தொடர்பாக கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை சீருடை அணியாமல் வண்ணமயமான நைட்டி மற்றும் ஜீன்ஸ் டி சர்ட் போன்ற சாதாரண நவநாகரீக ஆடைகள் அணிந்திருந்ததை அவர் பார்த்து கோபம், பொறாமை அடைந்தார். மேலும், ‘சசிகலா, இளவரசி ஆகியோர் சாதாரண ஆடைகள் அணிவதற்கு எப்படி அனுமதி வழங்கினீர்கள் எவ்வளவு வரும்படி கிடைத்தது?’ என்று அங்கு உள்ள சிறை அதிகாரிகளை கடிந்து கொண்டு கேட்டார். அதைத்தொடர்ந்து ‘சாதாரண உடைகள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது’ என்று ரேகா சர்மா, சசிகலாவிடம் கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சசிகலா அமைதியாக தொடர் மௌன விரதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா இருந்த சிறை அறைக்குள் சென்று ரேகா சோதனையிட்டார். அப்போது, ஒரு பையில் முன்பு ஒரு முறை ஷாப்பிங் செய்த பல்வேறு வகையான வண்ண, வண்ண ஆடைகள் இருந்ததாக தெரிகிறது. பின்னர், சசிகலாவிடம் சுமார் 5 நிமிடங்கள் வரை ரேகா சர்மா பேசினார். அப்போது, அவர் சிறை நிலவரங்கள் பற்றி கேட்டறிந்தார். அதற்கு சசிகலா ஆங்கிலத்தில் பேசி பதில் அளித்தார். ‘அனைத்து வசதிகளும் நன்றாக உள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் கன்னடம் கற்றுக்கொள்கிறேன் விரைவில் கன்ன அம்மா ஆவேன்’ என்று அவரிடம் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் ஆய்வின்போது ஆயா சசிகலா யவன ராணி போல் வண்ணமயமான சாதாரண உடையில் இருந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, முதல்-மந்திரி சித்தராமையா துமகூரு நகரில் நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுக்க மாட்டோம். அத்தகைய வேலையை நாங்கள் செய்ய மாட்டோம், அதற்கு கூன்விழுந்த அமைச்சர்கள், டிடிவி தினகரன் போன்றோர் தமிழகத்தி இருக்கிறார்கள்” என்றார். சென்னை: மார்ச் 15-ஆம் தேதி கட்சியின் பெயரையும் கட்சிக் கொடியையும் டிடிவி தினகரன் அறிமுகப்படுத்துகிறார். அதிமுகவை எடப்பாடி அணியிடம் இருந்து மீட்க டிடிவி தினகரன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தனிக் கட்சியாக செயல்படுவதற்கு பெயரை வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினார். அப்போது அனைத்திந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்குமாறு டிடிவி தினகரன் கேட்டுள்ளார் குக்கர் சின்னத்தை தங்கள் அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குக்கர் சின்னத்தை தினகரன் அணிக்கு ஒதுக்குமாறும் தினகரன் கேட்டுள்ள கட்சியின் பெயர்களில் ஒன்றை கொடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரில் 15-ஆம் தேதி நடக்கும் விழாவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. அன்று காலை 9 மணிக்கு கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பெயர் அறிவிக்கப்படும் முன்னதாகவே கட்சி கொடியின் நிறத்தில் சசிகலா இளவரசி உடை அணிந்து பேஷன் ஷோ நடத்தியுள்ளது, சிறைத்துறை வரலாற்றிலேயே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பகிர்