டிடிவி தினகரன், அதிமுக.வின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டார். ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு காட்சிகள் மாறின. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கை கோர்த்து டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்கினர்.

டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயித்து திருப்புமுனையை உருவாக்கினார். அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள புதிய கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்தார் அவர். இதற்கு சசிகலாவின் ஒப்புதலையும் பெற்றார். ‘அதிமுக.வையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்கவே தற்காலிகமாக புதிய கட்சியை ஆரம்பிக்கிறேன்’ என முந்தையை பேட்டிகளில் குறிப்பிட்டார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன் அணியின் அடுத்தகட்ட முக்கிய நகர்வாக இந்த புதிய கட்சி அறிவிப்பு விழா, மதுரையை அடுத்த மேலூரில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது

தினகரன் தனது இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன்.  “அம்மா மக்கள் முனேற்றக் கழகம்” என்ற பெயரையும் கறுப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

பகிர்