சவுந்தர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் அஸ்வினுக்கு 2வது திருமணம் நடந்துவிட்டது என்று கூறி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், அவரின் காதலர் அஸ்வின் ராம்குமாருக்கும் பெரியோர்கள் சம்மதத்துடன் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2015ம் ஆண்டு சவுந்தர்யா வேத் என்ற மகனை பெற்றெடுத்தார். மகன் பிறந்த சில மாதங்களில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் குடும்பநல நீதிமன்றத்தை அணுகி ‘சிஸ்டப்படி’ விவாகரத்து பெற்றனர். சவுந்தர்யா அப்பா, அம்மாவுடன் வாழாவெட்டியாக தங்கி கோச்சடையான் போன்ற டப்பா பொம்மைப் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அஸ்வின் பற்றி புதிய தகவல் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அஸ்வின் ராம்குமார் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளாராம். அவர் 2வது மனைவியுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இரண்டாவது மனைவி முகத்தில் அப்படி ஒரு பரவசக்களை. சவுந்தர்யாவையும், அஸ்வினையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் அவரின் முயற்சியால் எந்த பலனும் இல்லாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. சவுந்தரியா கணவரை பிரிய தனுஷ் காரணம் என்று ஒரு கிசுகிசு நீண்ட நாட்களாக உலவுகிறது. பெரிய இடத்து சமாச்சாரம். இதெல்லாம் சாதாரணமப்பா என்கிறார்கள் கோடம்பாக்கத்து உதவி இயக்குனர்கள்.  ஏற்கனவே சவுந்தரியா ரஜினி ‘கோவா’ படத்தை தயாரித்து ரஜினிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார். ஐஸ்வர்யா 3 என்ற படத்தை எடுத்து சொதப்பி பெயரைக் கெடுத்தார். ஐநாவில் சாணி மிதித்து பரதநாட்டியம் என்ற பெயரில் வாங்கிக் கட்டிக் கொண்டார். விலங்குகள் நல வாரிய தூதராக நியமிக்கப்பட்ட சவுந்தர்யா, ஜல்லிக்கட்டு போரட்டத்தின்போது சர்ச்சையில் சிக்கினார்.
பின்னர் சென்சார் போடுக்கு விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை சரிபார்த்து பரிந்துரை மட்டுமே செய்கிறேன் என்று தப்பித்தார். இந்த நிலையில் எப்படி சிம்பு காதலித்து கழற்றிவிட்ட பெரியமகளுக்கு தனுஷை ‘செட்டிங்’ செயதாரோ அதே போல் இளைய மகளுக்கு ஒரு புது அடிமை மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஆசிரம் பள்ளியில் உள்ள பிரின்சிபால் முதல் பியூன் வரை வலை வீசி தேடியுள்ளார் ரஜினியின் மனைவி வாடகை தராத தவப்புதல்வி லதா ரஜினி. தனது படங்கள் ஓடுவதற்காக ஒரு டுபாக்கூர் அமைப்பினை ஆரம்பித்து, “சிஸ்டம் சரியில்லை, ஓரே கஸ்டமாக இருக்கிறது, ஒரு நிமிசம் தலை சுத்திருச்சி” என்று காமெடி டயலாக்குகலை அள்ளி விடும் ரஜினி, வீட்டில் சிஸ்டம் சரியில்லாததால் மறந்திருந்த இமயமலைக்கு சென்றுள்ளதாகவும் அங்கு வாடகை தராமல் குதிரை சவாரி செய்ததாகவும், கப்சா நிருபர் தெரிவிக்கிறார்.
பகிர்