சமீபத்தில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏ-க்கள் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டம் முடிந்து வெளியே வந்துள்ளார். அப்போது, டி.டி.வி.தினகரன் தொடங்கும் புதிய கட்சி குறித்த ஆலோசனை விவாதம் நடைபெற்றிருக்கும் என எதிர்பார்த்த நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க அவரிடம், பெண் செய்தியாளர் ஒருவர் கேள்விகளை அடுக்கினார். அவர், கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், ‘ஸ்பெக்ஸ் ரொம்ப அழகா இருக்கு. அதற்கு நான் எப்போதும் ஸ்பெக்ஸ் போட்டிருப்பதாக செய்தியாளர் கூறவே,  இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க’ என்று பொறுப்பாகப் பதில் அளித்தார். பின்னர் சுதாரித்தவர், ‘எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளை, கட்சி மேலிடம் அறிக்கையாக வெளியிடும்’ என்று சொல்லிச் சென்றார்.  சிறிது தூரம் சென்ற பிறகும் செய்தியாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, அதற்கு ‘அழகா இருக்கீங்க….அழகா இருக்கீங்க….அழகா இருக்கீங்க’ என 3 முறை டவாலி போல் கூறினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் செய்தியாளரிடம் பேசும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பெண் நிருபர் குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து சக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், `அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது கண்டிக்கத்தக்கது, ஓர் அமைச்சரே பெண் செய்தியாளரிடம் இப்படி நடந்தால், அதை முன்னுதாரணமாக எடுத்து கட்சிக்காரர்களோ மற்றவர்களோ நடக்க வாய்ப்பாக அமையும். அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுமுன் செய்தியாளர்கள் கூடினர். இந்நிலையில் தனது சர்ச்சை பதில் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். பெண் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலளித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்ப்பதற்காகவே தான் அவ்வாறு பேசியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அனைத்து பத்திரிக்கையாளர்களையும் தான் மதிப்பதாகவும், அனைவருமே தனது சகோதர, சகோதரிகள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பெண் நிருபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வருத்தத்தை தெரிவித்துவிட்டதாகவும், அவர் தரப்பில் கூறப்பட்டது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திட்டமிட்டு சுருட்டப்பட இருக்கும் பணமதிப்பின் Figureஐ கேட்டதால், பெண் நிருபரின் ஃபிகர் பற்றி ஜொள் பொங்கக் கூறி பதிலளிக்காமல் நழுவியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். துறை சார்ந்த கேள்விகளை நான் எப்போதுமே தவிர்த்ததில்லை, ஆனால் அரசியல் சார்ந்த கேள்வி என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே அந்த சைட் அடித்ததாகவும், அது சரியான லெக்க்கின்ஸ் போட்ட ஒரு லெக் பீஸ் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். “அழகா இருக்கீங்க” என்று கூறினாலும் தப்பு. ஒரு வேளை ‘அழகா இல்லை” என்று கூறியிருந்தாலும் ‘நிறவெறி கமெண்ட்’ என்ன வறுத்து எடுப்பாங்க.” என்றும் புலம்பினார். விஜயபாஸ்கர். தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பெண் செய்தியாளரை பார்த்து இவ்வாறு கூறுவதை, அமைச்சருடன் இருந்த மற்ற அதிகாரிகள் சிரிக்கிறார்கள். இச்சம்பவம், முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்துக்கு அமைச்சராக இருந்துக்கொண்டு, அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர், பொதுவெளியில் பெண் நிருபரை பார்த்து, “நீங்க ரொம்ப அழகாக இருக்கிங்க” என மீண்டும் மீண்டும் கூறுவது சர்ச்சைக்குரியது ஆகும் என்கிறார் கப்சா நிருபர்.
பகிர்