சென்னை: டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். டிடிவி தினகரன் கடந்த 15-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினார். இந்த விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் தான் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்துகிறார் டிடிவி.

இவ்வாறு அலட்சியப்படுத்திவிட்டு கட்சியை நடத்தமுடியும் என்று அவர் நம்புகிறார். அதற்கு எனது வாழ்த்துகள். நான் மதிக்கும் மிகப் பெரிய தலைவரை அலட்சியப்படுத்தி படுகொலை செய்துவிட்டார் டிடிவி.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை. டிடிவி தினகரனின் அநியாயத்தை என்னால் தாங்க முடியாது.

இதற்காக எதிர்வினையாற்றும் வல்லமை என்னிடம் இல்லை. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. அரசியலில் இருந்தும் நான் விலகுகிறேன். எந்த கட்சியிலும் நான் இல்லை. இனி இலக்கிய மேடைகளில் பார்க்கலாம்.

அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். முக்கியமான குடும்ப அலுவலில் இருந்ததால் கட்சி அறிவிப்பு கூட்டத்துக்கு வரவில்லை என்றும் நாஞ்சில் தெரிவித்தார்.

பகிர்