ஒரே நேரத்தில் தேர்தல் களம் போல், திமுக அதிமுக பிரமுகர்கள் கருணாநிதி, மற்றும் நடராசன் இருவர் வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெறுவது மக்களிடையே பரபரப்பு செய்தியாக உள்ளது. இதனால் திமுகவில் ஸ்டாலினுக்கும், அதிமுகவில் சின்னம்மாவுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2016 டிசம்பர் மாதம் 1-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. தொடர் சிகிச்சை காரணமாக தற்போது சென்னை கோபாலபுரத்திலுள்ள, தனது இல்லத்திலேயே அவர் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், கடந்த பத்து மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தை விட்டு வெளியே செல்வதும் முழுவதுமாகக் குறைந்திருந்தது. இதற்கிடையே மு.க.தமிழரசுவின் பேரனைப் பார்த்து கருணாநிதி சிரிக்கும் ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வைரலானது.
திடீரென சென்னைக் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்குக் கடந்த அக்டோபர் 19-ம் தேதி சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். அதையடுத்து, மு.க.முத்து மகள் வழிப் பேரனும் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் சென்னை கோபாலபுரத்தில் திருமணத்தை கருணாநிதி கடந்த அக்டோபர் 30-ம் தேதி நடத்தி வைத்தார். மேலும், அன்றைய தினமே கோபாலபுரம் இல்லத்தின் வெளியே திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார். இந்தநிலையில், அவர் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். சுமார் மூன்று மாதத்துக்கு பின்னர் தற்போது அவர் அண்ணா அறிவாலயம் வந்தார்.அவரை, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அண்ணா அறிவாலயத்தில் சில நிமிடங்கள் இருந்த கருணாநிதி, பின்னர் கோபாலபுரம் இத்துக்குத் திரும்பினார். ஓய்விலிருக்கும் கருணாநிதி, கடந்த ஓராண்டில் அண்ணா அறிவாலயம் வருவது இது இரண்டாவது  முறையாகும். கருணாநிதியின் வருகை, தொண்டர்களிடம் உற்சாகத்தையும், ஸ்டாலின் மத்தியில் ஒரு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடிய ஸ்டாலின் தான் முதியவரான பின்னரும் இன்னும் செயல் தலைவராக உள்ளதை எண்ணி சகாக்களிடம் வருந்தியதாக கப்சா நிருபர் தெரிவித்தார். சரி வயசான காலத்தில் வீட்டில் ஓய்வெடுத்து அப்படியே முடங்கிப்போய் தனக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்தவர் எண்ணத்தில் மண்ணை போடுமாறு கலைஞர் துள்ளி எழுந்து கட்சி அலுவலகம் கொள்ளுப்ப்பேரன் திருமணம் என சுறுசுறுப்பாக உள்ளது ஸ்டாலின் தரப்பில் மேன்மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. இது ஒருபுறமிருக்க, சசிகலாவின் கணவர் ம.நடராசனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் ஆன சசிகலாவின் கணவர் நடராசன், கருணாநிதியை விட சில மாமாங்கம் இளையவர்.. கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். அப்போது இங்கிதம் கெட்ட தொண்டர்கள், கரகாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் அவரை திருமண விழாபோல் வரவேற்று தூற்றலுக்கு உள்ளாகினர். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவர் கலைஞர் போல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக நடராசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து செயற்கை சுவாசம் அளித்து வருகின்றனர். இதற்கிடையே, நடராசனைக் காண சசிகலா மீண்டும் பரோலில் வரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் முப்பதாண்டு காலம், ஜெயலலிதாவைன் அசைவுகளை பின்னணியில் இருந்து இயக்கியதாக கூறப்படும் நடராசன் அசைவற்று மருத்துவமனையில் தனது கடைசி நாட்களை கழிப்பது, சிறையில் இருக்கும் மெழுகுவர்த்தி தயாரிப்பாளர் சின்னம்மாவை வாழ்க்கையில் மிக மோசமான காலகட்டத்தில் தள்ளியுள்ளது. கிட்டத்தட்ட, திமுகவில் ஸ்டாலின், அதிமுக/அமமுக வில் சின்னம்மா ஆகியோரது நிலை அரசியலில் கவலைக்கிடமாக உள்ளது என மேலும் கப்சா நிருபர்
பகிர்