அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லியில் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனிமையில் டெல்லியில் வசித்து வந்தார். தமிழகத்தில் பாய்பிரண்டு திருச்சி சிவாவுடன் வசித்து வந்தவர், டில்லியில் யாருடன் வசித்து வந்தார் என தெரியவில்லை. இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கும், ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் ராமசாமிக்கும் வரும் 26ம் தேதி டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல்/மணவிழா அழைபிதழ் வைரலாக பரவி வருகிறது.
இதுபற்றி சசிகலா புஷ்பா உதவியாளர் கூறும்போது, சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடினர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நீதிமன்ற விசாரணையில், நேற்று முன்தினம் துவாரகா மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. என்றார். அக்கா இப்போது ஃப்ரீ பேர்டு என்றார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா ராமசாமி என்கிற வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என வெளியான இந்தச் செய்திதான் தற்போது டில்லி சர்க்கிளில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. எம்.பி. சசிகலா புஷாவிற்கும், வழக்கறிஞர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் பற்றிய அழைப்பிதழ் குறித்து சசிகலா புஷ்பா இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சசிகலா புஷ்பா எப்போதும் பரபரப்பான சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவரும், திருச்சி சிவாவும் சரக்கு பாட்டில்களுடன் சைடு டிஷ் சகிதம் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், சிவா புஷ்பாவுக்கி பேன் பார்க்கும் படம் போன்றவை முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின், ஜெ.வும், சசிகலாவும் தன்னை அடித்துவிட்டதாக பாராளுமன்றத்தில் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நானும் போட்டியிடுவேன் எனக்கூறி அவரின் கணவர் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுப்பினார். ஆனால், அதிமுகவினர் கணவர் லிங்கேஸ்வர திலகனை கடுமையாக தாக்கி வெளியே அனுப்பினர். பின்னர் நடிகர் சங்கப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணை நடிகர் வராகி ‘சிவா மனசில புஷ்பா’ என்ற திரைப்படத்தில் சசிகலா புஷ்பா வாழ்க்கை வரலாறை நாறடித்தார். இப்படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்த போது, அந்த வழக்கில் ஆஜரானவர்தான் இந்த புதிய கணவர் ராமசாமி! மேலும் சசிகலாவின் உறுப்பினர் அட்டை பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியவரும் இவரே. இவரைத்தான், தற்போது தினகரனின் ஆதரவாளராக மாறியுள்ள சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த அழைப்பிதழ் போலியானது. அடுத்த சின்னம்மா சசிகலா புஷ்பாவின் பெயரை கெடுக்க வேண்டும் என சிலர் இதை செய்துள்ளனர் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த அழைப்பிதழை வாட்சப்பில் பார்த்த திருச்சி சிவா அதிர்ச்சியில் உறைந்துள்ளார். கணவர் லிங்கேஸ்வர திலகனும் புது மாப்பிள்ளை பார்த்து விட்டு விவாகரத்துக்கு ஏற்பாடு செய்திருப்பாள் பழைய மனைவி என எதிர்பார்க்கவில்லை. “உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே” என்ற வசனத்தை உச்சரித்தவாறு சிவா சரக்கில் உளறியதாக தெரிகிறது. அவரை கலைஞர் தரப்பு சமாதானம் செய்துள்ளது. திருச்சி சிவா லிங்கேஸ்வர திலகன் இருவரில் உண்மையான கணவர் என்றறிய டி.என்.ஏ சோதனை செய்து புலனாய்வு செய்து ஜீவனாம்சம் வழங்க நீதிமன்ற துறை வட்டாரங்கள் தயாராகி வருகின்றன. இருவருக்கும் இடையே ஜீவனாம்சம் பெறுவது யார் என்ற போட்டா போட்டி நிலவுவதாக கப்சா நிருபர் தெரிவிக்கிறார். பெரியாரின் கொள்கையை பின்பற்றி இல்லறத்தில் இனையும் இளஞ்சோடிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…அதேநேரம் ஆருயிர் தம்பி திருச்சி சிவாவுக்கு ஆறுதல் கூறவும் கடைமைப்பட்டுள்ளேன். நமது மகளிரணி தலைவி கனிமொழி தலைமையில் ஆறுதல் கூற ஒரு குழுவையும் அமைக்கிறேன்! இவ்வாறு கலைஞர் சைகையில் கூற அறிக்கை தயாரித்து சசிகலாபுஷ்பா புதுமண தம்பதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பகிர்