அன்றாட பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன், உங்களுக்கு எத்தனை தடவைதான் சொல்வது என்று காட்டமாக ரஜினி பேசி உங்கள் நியூஸ் கப்சா நிருபர் உள்ளிட்ட பத்திரிகையாளர்களை கடுப்பேற்றி உள்ளார். ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்தபோது அவரது பேச்சு புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து அவரிடம் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியே வரும்போது உள்ளே போகும் போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சிலவற்றுக்கு பதில் அளிப்பார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்தார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இதுபோல்தான் கடந்த 10-ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி விவகாரம் குறித்தும் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி படுகொலை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அமைச்சர் ஜெயக்குமாரும் பகுதி நேர அரசியல்வாதி என்று இன்று சொல்லும் ரஜின நாளை தான் ஒரு அரசியல் ஊழியர் என்று சொல்லும் காலம் வரும் என்று விமர்சனம் செய்தார். கமல்ஹாசனும் அவர் இதற்கு மட்டும்தானா நழுவுகிறார், தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் நழுவுகிறார் என்றார். இந்நிலையில் இமயமலையில் இருந்து திரும்பி வந்த ரஜினி சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவிரி குறித்தும் பெண்கள் பாதுகாப்பும் குறித்து கேட்டதற்கு முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என்று நீங்கள் சொன்ன நீங்கள் பதில் சர்ச்சையை கிளப்பியதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் டிசம்பர் 31-ஆம் தேதி சொல்லிவிட்டேன். நான் இன்னும் அரசியல் களத்தில் இறங்கவில்லை என்று. இறங்கிவிட்டால் நீந்திதான் ஆகவேண்டும். அதுவரை அன்றாடம் நிகழும் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று அப்பவே சொல்லிவிட்டேன். இன்னும் எத்தனை முறைதான் சொல்வது என்று கேட்டுவிட்டு சிரித்தார். அரசியல் என்பதே மக்களின் அன்றாட பிரச்சனையை பேசி தீர்ப்பதுதான், அதை குறித்து கேள்வி கேட்க கூடாதென்றால் பிறகு என்ன கூந்தலுக்கு அரசியலுக்கு வந்தீரு என்று கோபப்பட்டு பி.பி. எகிற டென்ஷனான கப்சா நிருபரை அருகிலிருந்த பிரபல பத்திரிகையாளர்கள் ஆசுவாசப்படுத்தினர். அதானே.. அம்மா உணவகத்தில் ஏன் உப்புமா போடலை..ராகவேந்திரா மண்டபத்துல ஏன் கறிவிருந்து போடலை, குரோம்பேட்டையில ஏன் பஸ் நிறுத்தலை..லதா ஏன் வாடகை கொடுக்கலை.. காவேரி டேங்க்ல ஏன் தண்ணி விடலை.. நெடுவாசல்ல குழாய் ஏன் போடுறாங்க..இப்புடி 30 வருசத்துக்கும் மேலாக அன்றாடம் நடக்கும் பிரச்சினைகளை எல்லாம் அவர் கிட்ட கேட்டா எப்புடி? எதாச்சும் புது இந்தியா பிறக்குதா.. அதைப்பற்றி கேட்டா.. கடைசியாக வந்த தகவல் (உத்தரவின்) அடிப்படையில் பட்டுன்னு பதில் சொல்லுவாரு.. என்றார் மற்றொரு நோஞ்சான் நிருபர். ரஜினி சார், உங்களுக்கு அரசியல் சரி வராது… பேசாமல்இன்னும் நாலு படத்தில் நடித்து விட்டு, மிச்சம் உள்ள வாழ்க்கையை அமைதியாக ஆன்மீகத்தோடும், உங்கள் குடும்பத்தோடும் செலவிடுங்கள்..அது உங்கள் மீது உள்ள மரியாதையை காப்பாற்றும். என்றார் பட்டையும் கொட்டையுமாக ஒரு நிருபர்.
கடைசியாக ஒரு சமூக அக்கறையுள்ள நிருபர்: ‘கடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது. 39 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறாரே, ராமர் கோவில் கட்டுதை கொள்கையாக கொண்டு ரத யாத்திரை தமிழகம் வந்து கலவரத்தை தூண்டப்பார்க்கிறதே இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்றார். சொட்டையை கோதிவிட்டபடி, கேனத்தனமாக ஹ ஹ ஹ என்று சிரித்த ரஜினி, “ரத்தம் ஓடுனாலும் சரி, ரதம் ஓடுனாலும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலை இல்லை, பொது விஷயங்களை பற்றி கருத்து கூறமாட்டேன் ஆனால் எம்.ஜி.ஆர். ஆட்சி மட்டும் தருவேன். அடுத்து காலா 2.0 தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என நான் ரொம்ப பிசி” என்று காரில் ஏறிப் பறந்தார்.
பகிர்