உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயாராக உள்ளோம் என்று நடிகர் விஜயை பார்த்து சினிமாவுக்கு வந்து வராத நடிப்பை வரச்சொல்லும் உதயநிதி ஸ்டாலின் ட்விடரில் திடீரென பதிவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலையை மர்மநபர்கள் உடைத்துவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஸ்டாலின், கனிமொழி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்!. உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா!. உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! என்று உதயநிதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் சமீபமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கருவில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியிருந்த அவர் திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் அவ்வப்போது தலை காட்டி சினிமா கவர்ச்சியும் வாரிசு அரசியலையும் காட்டி வருகிறார். இது குறித்து நமது கப்சா நிருபர் “அடுத்த வாரிசு தயாராகிறது. ஓரு காலத்தில் கருணாநிதி தனக்குப் பிறகு கட்சி தன் மகனிடம் மட்டுமே செல்லவேண்டும் என்ற தீய எண்ணத்தில் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி அனைத்து வகைப் போராட்டங்கள், நிகழ்ச்சிகள் தயாரிக்கப் பட்டன. இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஸ்டாலின தகுதி, கட்சி பங்களிப்பு பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கருணாநிதியின் நரி மூளை திட்டம் போட்டு செயல்பட்டதுடன் ஸ்டாலினுக்கு போட்டியாக இருக்கக் கூடும் என்று கருதப்பட்ட அனைவரையும் கட்டம் கட்டி வெளியேற்றியது.

https://twitter.com/Udhaystalin/status/976030238604910592

 

அடப்பாவி ..நீ கருணாநிதி பேரன் இல்லையா? ..பெரியார் பேரான?…அப்போ EVKS இளங்கோவன் யார்?” பெரியாரின் பேர பிள்ளையா? பெரியார் தன்மானமுள்ள தமிழரா? அவர் கன்னடிகர் என்பதை மறைக்க ஏன் உதயநிதி பார்க்கிறார்? அவர் கன்னடிகர் என்பதால் தானே திராவிட இயக்கத்தை ஆரம்பித்தார். இல்லை என்றால் தமிழ் இயக்கத்தை அல்லவா ஆரம்பித்திருப்பர். அவருடைய அடிவருடிகளும் தமிழ் இயக்கத்தை ஆரம்பிக்காமல் திராவிட இயக்கத்தை ஆரம்பித்த கதை இது என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆமாம் இவரின் அம்மா கோவில் கோவிலாக ஏறி இறங்கிறாங்களே அப்போ இவருக்கு பெரியார் நினைவு வரவில்லையா? தன்னுடைய வீட்டு வைபவங்களுக்கு ஐயர் வைத்து பூஜை செய்யும்போதாவது தான் பெரியார் பேரன் என்று நினைவு வந்திருக்கணுமே! ஊருக்கு உபதேசம் செய்யும் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் வேஷதாரிகளின் உண்மை முகத்தை மக்கள் நன்றாக அறிவர்.” என்று நக்கலடித்தார். பின்னர் ஒரு சினிமா உதவி இயக்குனரை விசாரித்ததில், பாடி கார்டு இல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டுக்கே வராத உதயநிதி தனது டூப்பை அனுப்பி இப்படி ஒரு ‘உதார்’ அறிக்கையை படிக்க செய்ததாக அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது.

பகிர்