2016 செப்டம்பர் 22 இரவு 9.30 மணிக்கு ஜெயா உடல் நலம் குன்றி உதவி கேட்டு அழைத்தார். வேதா இல்லத்தின் முதல் தளத்தில் உள்ள குளியல் அறையில் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது உடம்புக்கு முடியவில்ல என ஜெயா தெரிவித்துள்ளார். நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு சின்னம்மா அளித்துள்ள வாக்குமூலத்தில் ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும், அவரை கைத்தாங்கலாக அழைத்து படுக்கையில் படுக்க வைத்ததாகவும் கூறி உள்ளார். சிறிது நேரத்தில் டாக்டர் சிவகுமார் (சசிகலாவின் உறவினர்) அழைக்கப்பட்டார். அவருடன் இரண்டு செக்யூரிட்டிகளும் ஒரு டிரைவரும் அழைக்கப்பட்டனர்.
டாக்டர் சிவகுமார் அப்பல்லோ துணை தலைவர் பிரீதா ரெட்டியின் கணவரை தொலைபேசியில் அழைத்து ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார். 10 15 நிமிடங்களில் ஆம்புலன்சுகள் வேதா இல்லத்திற்கு வந்தன. மயங்கிய நிலையில் அப்பல்லோ மருத்துவக் குழு ஒரு ஸ்ட்ரெச்சரில் தரை தளத்திற்கு கொண்டு வந்தனர். காவல் துறை கண்காணிப்பு அறைக்கு தகவல் பறந்தது. சாலைப்போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. ஆம்புலன்சில் கண் விழித்த ஜெயலலிதா ‘நான் எங்கே இருக்கேன், என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்’ என கேட்டுள்ளார். மருத்துவமனைக்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்று தகவில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று காலை டாக்டர் சிவகுமார் ஜெயாவை பரிசோதித்துள்ளார். அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அப்போதே சசிகலா மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதா மறுத்துள்ளார். தனக்கு தானே கைவைத்தியம் செய்து ஜெயாவின் காய்ச்சல் குணமாகியுள்ளது. ஜெயா உடல் நிலை மோசமானதற்கு காரணம் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புதானாம். (சசிகலா சொல்கிறார்) இந்த நிலையில் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட ஜெயா முடிவெடுத்துள்ளார். கட்டுக்கடங்காத சர்க்கரை அளவுகளால் உடல் நிலை செப்டம்பர் முதல் வாரம் முதலே மோசமடைய துவங்கி உள்ளது. ஒரு சர்க்கரை நோய் மருத்துவர் ஒரு தோல் மருத்துவர் இருவரும் நியமிக்கப்பட்டு சற்று வீரியம் குறைந்த ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. உடன் நிலை சரியானது ஆனால் செப்.19 மீண்டும் உடல் நிலை மோசமானது.
ஜெயாவின் கடைசி பொது நிகழ்ச்சி பங்கேற்பு நடந்தது செப்.21 சின்னம்ம 20 டாக்டர்கள் பெயர் அடங்கிய ஒரு தொகுப்பை கமிஷனிடம் வழங்கியுள்ளார். இவர்கள் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளை பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என தெரிகிறது. செப்.22 முதல் டிச.5 வரை 75 நாட்கள் ஜெயலலிதாவை யாருமே பார்க்க அனுமதிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள சின்னம்மா, தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ், ஓ.பி.எஸ். மற்றும் தம்பிதுரை உடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 22, 27ஆம் தேதிகளில் நலம் விசாரித்துள்ளதாக கூறினார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தரைதளத்திற்கு ஸ்கேன் செய்ய கொண்டு வந்த பொழுது ஜெயா பேசிய தாகவும் அதை மேற்கண்ட அதிமுக பிரமுகர்கள் பார்த்ததாக கூறியுள்ளார். கண்ணாடி அறை வழியாக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருமுறை ஜெயாவை பார்த்துள்ளார். அப்போது ஜெயா கை அசைத்ததாக தெரிகிறது. ஜெயா அனுமதியுடன் அவரை சில முறை வீடியோப்படம் எடுத்து வைத்து மருத்துவர்களை மிரட்டி வந்துள்ளார் சசிகலா. தனது கடைசி கால வாழ்க்கையை சினமாப்படமாக எடுக்க நான்கு ஐந்து முறை நடித்து கொடுத்துள்ளார்.
ஜெயா குளிர் கால கூட்டத் தொடர் ஏற்பாடுகளை செய்ததாக சின்னம்மா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். காவிரி தண்ணீர் குறித்த பிரச்சினைகளை கவனிக்க ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். தலைமை செயலர் ராமமோகன்ராவ், நீதிபதி முத்துக்குமாரசாமி, ஷீலா பாலகிருஷ்ணன் முதல்வரின் உதவியாளர்கள் ஏ.ராமலிங்கம், கே.என். வெங்கட் ரமணன் ஆகியோரும் இந்த 75 நாள் நாடகத்தில் நடித்துள்ளனர்.
பகிர்