பாஜகவால் வலுக்கட்டாயமாக பிரபலப்படுத்தப்பட்டு வரும் ராம் ராஜ்ஜிய ரத யாத்திரையில் ஊர்வலமாக வரும் ரதம் அயோத்தியில் கட்டப்பட இருக்கும்(?) ராமர் கோவிலின் மாதிரியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ராமர் கோவிலின் மாதிரியைத் தாங்கி வரும் ரதம் மோட்டர் வாகனச் சட்ட விதிகளை மீறியுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுவதாக இந்து நாளிதழ் கூறுகிறது.. மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரீ ராம்தாஸ் மிஷன் சொசைட்டி இந்த யாத்திரையை ஆரம்பித்துள்ளது. பிப்.13 அன்று ஆரம்பித்த யாத்திரை கேரளாவின் திருவனந்தபுரத்தில் 41 நாட்களுக்கு பின்னர் முடிவடையும். மொத்தம் ஆறு மாநிலங்களை கடந்து வருகிறது இந்த ரதம். மதுரை, ராமேவரம், திருநெல்வேலி வழியாக வந்த ரதம் நாகர்கோவிலை சமீபத்தில் வந்தடைந்தது.
இந்த ரதமானது, போக்குவரத்து விதிகளை கண்மூடித்தனமாக மீறி உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வாகனம் சரக்கு வாகன பட்டியலில் சேராது. பயணிகள் வாகன லிஸ்டிலும் சேராது. வாகனத்திற்கு முன்பும் பின்பும் நம்பர் பிளேட் வைக்கப்படவில்லை. சரக்கு வாகனமாக இருந்தால் சாமியார்களை ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனம் கோவில் வடிவத்தில் மாற்றி அமைத்துளளதையும் விதிகளின்படி அனுமதிக்க முடியாது. ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வண்டியை மட்டுமே அனுமதி பெற்று மாற்றியமைக்க முடியும். சாதாரண டூ வீலருக்கு வண்ணத்தை மாற்றி அடித்தாலே, பதிவு புத்தகத்தில் இல்லாத நிறம் என்று காவல் துறை கைது செய்து விசாரிக்கிறது. நம்பர் பிளேட் இல்லாத ரதமும் இதற்கு விதிவிலக்கல்ல.
வாகனத்தை மாற்றி அமைத்தால், அடுத்த நொடியே அதன் பிட்னஸ் சர்டிபிகேட் காலாவதி ஆகிவிடுகிறது. மறுபடியும் புதியதாக வாங்க வேண்டும். நம்பர்பிளேட் இல்லாத வாகனம் பதிவு செய்யாத வாகனமாக கருதப்படும். காவல் துறை அனுமதி இன்றி கொல்லைப்புற வழியாக இந்த ரதம் மதுரை வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மீறல்கள் பின்வருமாறு: 1. அது பதிவுசெய்யப்பட்ட வண்டியாக இருந்தால் அதன் பதிவெண் பட்டை (தமிழில் நம்பர் பிளேட் என்பார்கள்) வண்டியின் முன்புறம், பின்புறம் அல்லது பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது இல்லை (தேவலோகத்தில் பதிவு செய்யப்பட்ட வண்டிகளுக்கு இந்த விதி பொருந்தாது என தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் சொல்லக் கூடும்) 2. பதிவுசெய்யப்பட்ட வண்டியின் அமைப்பை கோவில் போல் மாற்றியமைக்கக் கூடாது. ஆம்புலன்சாகவோ, தீயணைப்பு வண்டியாகாவோ மாற்றலாம்.3.ரதத்தின் எஞ்சின் அல்லது உடல்(?) சரக்கு வண்டியினுடையதாக இருந்தால் அதில் சாமியார்களை ஏற்றிச்செல்ல முடியாது. “கலவரத்தை தூண்ட வந்த வண்டிக்கு நம்பராவது பிளேட்டாவது” என்று நமது கப்சா நிருபரிடம் அங்கலாய்த்தார் கூட்டத்தில் வந்த ஒரு ரவுடி சாமியார்..
பகிர்