மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல தெரிவித்தபோது, அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு டுபாக்கூர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், வீட்டுப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் சசிகலாவின் சகோதரர் மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து இருந்தது. இந்த ஆணையத்தின் முன் கடந்த ஜனவரி 2-ம் தேதி ஆஜராகி கிருஷ்ணபிரியா வாக்குமூலம் அளித்தார்.


அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, சசிகலாவைத் தவிர வேறுயாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. தீபாவைக்கூட திருப்பி அனுப்பினோம். என்னுடைய தாயார் இளவரசியும், அத்தை சசிகலாவும் ஒன்றாக 3-வது தளத்தில் பேஷண்டுகளை துரத்தி விட்டு, கேமிரா ஓயர்களை துண்டித்துவிட்டு படுக்கைகளை பிடுங்கிக் கொண்டு தங்கி இருந்தார்கள். ஜெயலலிதா அழைக்கும் போது சசிகலா மட்டுமே தனியாகப் போவார். வேறுயாரையும் அழைத்துச் செல்லமாட்டார்” என கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டதாகக் கூறியது எல்லாம் பொய் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த ஆண்டு பொதுமேடையில் பேசி மக்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால், கிருஷ்ணபிரியா தனது வாக்குமூலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின்போது உடல்நலம் தேறியபோது, இட்லி சாப்பிட்டதாகக் கூறியுள்ளார். அதாவது ஜெயலலிதா உடல்நலம் தேறிவந்தபோது, இட்லி, பொங்கல், தக்காளி சாதம் சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் பட்டை சாதம், ஆகியவற்றை பழக்க தொஷத்திற்காக சிறிய அளவு சாப்பிட்டார், சத்துணவில் முதன்மை வகிக்கும் ஐஸ்கிரீம் கூட சிறிதளவு சாப்பிட்டார் என்று கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.

ஆனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் சிகிச்சை கருவிகள் அகற்றப்பட்டபோது, அவரின் மூளை செயல்பாட்டில் இருந்ததா என்பது குறித்து தனக்கு தெரியாது, ஆனால் தமிழகத்தின் அரசியல் மூளையாக சின்னம்மா இருந்தார் எனத் தெரியும் என கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார். அதேசமயம், டிசம்பர் 5-ம் தேதிமாலை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த எம்கோ கருவி அகற்றப்பட்டதும் வீட்டில் இருந்து அவரின் சேலை ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்த சேலையை ஜெயலிலதா உடலில் சுற்றி அவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றோம். இது தந்தி டிவி பாண்டேவிற்கு தெரிந்து தொலைக்காட்சியில் கசிந்தது. வீட்டின் வரவேற்பறையில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு, புரோகிதர் ஒருவரின் உதவியோடு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பூஜைகளின் போது 7 பெண்கள் உடன் இருந்தோம் என கிருஷ்ணபிரியா கூறியுள்ளார். இறந்த பிறகு உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்காமல் ஒரு அறிவிப்புக் கூட வெளியிடாமல் சின்னம்மாதான் சர்வாதிகாரமாக செயல்பட்டார் என்றும் கிருஷ்ணப்பிரியா பெருமை பொங்கக் கூறினார்.