இயேசு உயிர்த்தெழுந்தது நிரூபிக்கப்படவில்லை என இசைஞானி இளையராஜா கூறிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவின் இந்த கருத்து கிறிஸ்தவ மதத்தினரின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும்படி இருப்பதாகக் கூறி அவரது வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதற்கிடையே, இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல் எவரும் இருந்ததில்லை. இயேசு உயிர்த்தெழுந்ததாகக் கூறுவார்கள். ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை. உலகிலேயே உண்மையிலேயே உயிர்த்தெழுந்த ஒரே மகான் ரமண மகரிஷி மட்டும்தான். அதுவும் தனது 16 வயதில்”, என்று கூறியிருந்தார். இந்நிலையில், அவரின் கருத்து கிறிஸ்தவ மதத்தினரின் மத நம்பிக்கையைப் புண்படுத்தும்படி உள்ளதாக கூறி, சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் தி.நகரில் இருக்கும் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முயன்றுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தி.நகர் மேம்பாலம் அருகே போராட்டம் நடத்த முயன்றபோது, அங்கு வந்த போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். இதனால் இளையராஜா வீடு அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி சற்றும் கவலைப்படாத இசைராசா கப்சா நிருபருக்கு அளித்த பேட்டியில்: “நான் உண்மையத்தனே சொன்னேன். இதுக்கு எதுக்கு போராட்டம்? இஸ்ரவேலில் செத்த ஏசுவுக்கு ஏன் நாம இந்தியன் கவலைப்படணும்? அவர் செத்தா என்ன உயிர்த்தா என்ன? ஒரு துண்டு அப்பம் கொடுத்தாரா இந்திய ஏழைகளுக்கு? ஏசுவுக்கு வயதாவதால் சிரியா கிருத்துவமக்களை காப்பாற்ற முடியவில்லை… தமிழ்நாட்டுக்கு ஓடி வந்து விட்டார்… சங்கர மடத்தில் சேர்த்து கொள்ளச் சொல்லுங்கள்…உயிர்த்தெழவில்லை என்று நான் கூறியதை யாரும் பெரிது படுத்த வேண்டாம்…எனக்கு சந்தேகம்… கர்த்தார்ன்னா ஏசுவா, மரியா, தேவனா, பிதாவா… யாரு உண்மை…இந்து மதத்துல நெறையா பிரிவு நெறய கடவுள்ன்னு சொல்லிட்டு இப்ப பார்த்தா ஒங்க இதுல ஊருபட்ட பிரிவு ஒவ்வொன்னுக்கும் தனி தனி கடவுள் ….யாரு பெரிசுன்னு யாரு உண்மைன்னு முடிவு பண்ணுங்க பார்க்கலாம் பாவாடைகள் தங்கள் நம்பிக்கையை ஒன்றும் அறியாத அப்பாவிகளிடத்தில் திரித்து கூறி மதம் மாற்றுகின்றனர். நான் கூறி இருப்பது ஒன்றும் தவறான கருத்து அல்ல. ஏசுவை சிரியாவுக்கு அனுப்புங்கள்… உண்மையான கடவுள்… உயிர்த்தெழுந்த கடவுள்ன்னா… இங்க தமிழ்நாட்ல எங்கிட்டயே மங்களம் பாடாதீங்க…இந்த பிரச்சனையே காவேரி, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சனையை மறைக்கத் தான். இயேசு வந்தா என்ன, வராட்டி என்ன இவங்களுக்கு?. அது கிறித்தவர்களோட குருட்டு நம்பிக்கை.. மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்” என்று அனைவரும் உருகவைத்த நான், கேவலம் இந்த காவி கொடுக்கும் விருதுக்காக இப்படி பேசுவதை பெரிதுபடுத்த வேண்டாம். என் திறமைக்கு விருது கிடைக்கவில்லை. எனது பேச்சிற்கு கிடைத்திருக்கிறது! விருது வாங்கப் போன போதே பாஜக அடிமை சாசனத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுத்தான் டில்லியில் விமானம் ஏற அனுமதி கிடைத்தது.” என்று அடங்காத சிரிப்புடன் முடித்தார்.
“வைரமுத்து வின் ஆண்டாள் பற்றிய கட்டுரைக்கு எதிர் வினை ஆற்றி அவாள்களின் அருள் பெற நினைக்கிறார். பத்ம விபூஷண் விருது வழங்கி மேலும் பல சன்மானங்களை எதிர்பார்க்க வைத்து இவரை விலைக்கு வாங்கியது போல் உள்ளது. இவர் தன இசையால், தன இசை ஞானத்தால் பார்ப்பனன் ஆகிவிட்டதை போல் நினைக்கிறார். அவாள்கள் ஒரு போதும்பிற ஜாதியினரை மதிக்க மாட்டார்கள், தன சுய லாபத்திற்காக தவிர, என்பதை எப்போது உணருவாரோ தெரியவில்லை. இவர் தம்பி கங்கை அமரன் சிறுதாவூர் பங்களாவை சின்னம்மாவிடம் இருந்து மீட்க ஏற்கனவே தன்மானத்தை விற்று அவள்களிடம் விலைபோய்விட்டார். இப்போது இவர் ஆரம்பித்திருக்கிறார். அவ்வப்போது தன் காவி விசுவாசத்தை வெளிக்காட்டுவது இவருடைய வழக்கம். பிஜேபி கொடுத்த ஒரு விருதுக்கே இப்படின்னா போகப் போக நிலைமை இன்னும் மோசமாகும்.” என்று நெற்றியில் பிளஸ் போட்டுக் கொண்டார் நமது கிறித்தவ கப்சா நிருபர்.
பகிர்