எடப்பாடி தொகுதியில் சமுத்திரம் அருகே உள்ள தேநீர் கடையில் டீ குடித்த முதல்வர் பழனிசாமி அந்த கடைக்காரரிடம் துணை முதல்வர் ஓ.பி.எஸ் போடும் டீ போலவே நன்றாக இருப்பதாகப் பாராட்டினார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு மத்திய அரசின் மக்கள் விரோத நலத்திட்டங்களை தொடங்கிகிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அம்பாள்’ என்ற கிராமக் கடையொன்றில் தேநீர் அருந்தினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்கிழமை தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்க சென்போது ஓ.பி.எஸ் சை பழிக்கும் இந்த ருசிகர சம்பவம் நடந்தேறியது. எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சமுத்திரம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகளைப் பார்வையிட்டார். அப்போது, சுகாதாரத் துறை அமைச்சர் .விஜயபாஸ்கர், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின்னர், தோட்டக் கலைத்துறை சார்பில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றார். அதன்பின்னர், செல்லும் வழியில் சமுத்திரத்தில் உள்ள அம்பாள் எனும் தேநீர் கடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். பின், தேநீருக்கான தொகையை முதல்வர் செலுத்தினார். ஓ.பி.எஸ் போடும் தேநீர் நன்றாக இருக்கிறது எனவும் அவர் கடைக்காரரை பாராட்டியுள்ளார். என்ன இருந்தாலும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஒரு முன்னாள் டீ மாஸ்டர் என்பதை குத்திக் காட்டும் விதமாக இச்சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுகவின் ஆய்வறிக்கையை தந்துள்ளோம். அப்போது ‘டீ சாப்பிடுகிறீர்களா?’ எனக் கேட்டனர். இப்படித்தான் ஒருமுறை ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்று டீ சாப்பிட்டேன். உடனே அவர் பதவி பறிபோனது. துணை முதல்வரானார். அவரைப் பார்த்து சிரித்ததற்கும் பதவிபோனது. நாளைக்கு இவர்கள் நிலைமை என்னவென்று எனக்கு தெரியவில்லை. அதனாலேயே ஒரு 15 நிமிடம் உட்கார்ந்து ‘டீ கொடுங்க’ என கேட்டு குடித்துவிட்டுதான் வந்துள்ளோம்” என்றார்.
இந்த ‘தேநீர் வியூகம்’ குறித்து சமூக வலைதளங்களில் பதிவான கருத்துகளின் எதிரொலியாக, குடும்ப ஜோசியர் கூறியதால் ஒரு சாமானிய டீ கடைக்காரரை பாராட்டி உயிரை பணயம் வைத்து டீ குடித்த எடப்பாடி, அடுத்ததாக சென்னையில் உள்ள கையேந்தி பவனில் வடைகறி, தள்ளுவண்டியில் அமித்ஷாவிற்கு பிடித்த பக்கோடா உள்ளிட்ட பண்டங்களை தின்று படம் எடுத்து பாஜகவின் நன்மதிப்பை பெற உள்ளார் என்று கப்சா நிருபர் தெரிவிக்கிறார். இந்த தேனீர் வியூகம் ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை. தமிழக ஆளுநர் பன்வாரிலால் பதவியேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என  ஆட்சேபம் தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 74வயது பாப்பத்தி என்ற அம்மையார் அறிவாலயத்துக்கு வந்ததையும், கழக நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் இருந்ததால் தன்னைக் காண முடியாமல் சென்றதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியைக் கண்டு, கழக நிர்வாகிகள் வாயிலாக அந்த அம்மையாரை எனது வீட்டுக்கு அழைத்து, தேநீர் விருந்து அளித்துதடன், தலைவர் கலைஞர் அவர்களிடமும் நேரில் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். ஆர்கே நகர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் வேட்டியில் கொட்டிய ஒரு சொட்டு தேனீரை வைகோ துடைத்த கூற்று அரங்கேறியது நினைவிருக்கலாம். திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் அவரது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த ராகுல்காந்திக்கு, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார்.
பகிர்