சசிகலா புஷ்பாவுக்கு சில தினங்கள் முன்பு இரண்டாவது திருமணம் நடந்தது. இந்நிலையில் மறுநாளே நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சசிகலா புஷ்பா என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே திருச்சி சிவாவை அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதை அடுத்து ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல் மாநிலங்கவையில் குற்றம் சாட்டி பரபரப்பூட்டினார். பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீதும், அவரது கணவர் திலகன் மீதும் வழக்குகள் பாய்ந்தன. அத்தனையையும் சமாளித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பதவிக்கு தனது கணவர் திலகரை போட்டியிட அனுப்ப அவர் கடுமையாக தாக்கப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்டார்.
அதன் பின்னர் சிறிது காலம் பரபரப்பின்றி இருந்த சசிகலா புஷ்பா பின்னர் திடீரென தினகரனை சந்தித்துப் பேசி பரபரப்பூட்டினார். இதனிடையே தனது கணவர் திலகரிடமிருந்து 7 மாதங்களில் விவாகரத்து வாங்கினார். பின்னர் ராமசாமி என்பவரை மணக்கப் போகிறார் என்று பேச்சு அடிபட்டது. ராமசாமி மனைவி நீதிமன்றத்தில் முறையிட நீதிமன்றம் சசிகலா புஷ்பா திருமணத்திற்கு தடை பிறப்பித்தது. ஆனாலும் தடையை மீறி நேற்று திருமணம் செய்து பரபரப்பூட்டினார். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிதாகி வருகிறது. தூத்துக்குடியில் பொதுமக்கள் திரண்டு போராடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பழைய பாய்பிரண்டு திருச்சி சிவாவை மறக்க முடியாமலும், முந்தாநாள் கணவர் திலகனுடன் வாழ்ந்த பொன்னான நாட்களை அசைப்போட்டுக் கொண்டும், புதுக்காதல் கணவர் ராமசாமியின் வாழ்க்கை ஒரே நாளில் புளித்ததாலும், தூத்துக்குடி போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ளும் வகையில் திருமணம் முடிந்த மறுநாளே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பதாகை ஏந்தி சசிகலா புஷ்பா போராட்டத்தில் ஈடுபட்ட படம் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை முகநூல், வாட்ஸ் அப், வலைதளங்களில் நெட்டிசன்கள் எடுத்துப் போட்டு பாராட்டியும், விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர். அவரது உதவியாளரை நமது கப்சா நிருபர் விசாரித்ததில், நீதிமன்ற கண்டிப்பை மீறி திருமணம் செய்ததை விமர்சிப்பவர்களை திசை திருப்பவும், ராமசாமி மனைவியின் மீது ஏற்படும் அனுதாபத்தை களையவும், இப்படி பத்தினி வேடம் போடுவதாக ரகசியமாக கூறினார். ஒரு போராளி இமேஜை ஏற்படுத்திக் கொண்டு டிடிவி தினகரனுடன் இணைந்து கொண்டு சின்னம்மாவை செல்லாக்காசாக்க சசிகலாபுஷ்பா போடும் நாடகமிது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் திருச்சி சிவாவுடன் இருப்பது போலவும் பேன் பார்த்து சிக்கெடுப்பது போன்ற புகைப்படங்களை இணைய தளங்களில் இருந்து நீக்க சைபர் கிரைம் போலீசாரிடம் ஆலோசனையில் உள்ளதாக தெரிகிறது.
பகிர்