காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் பிரச்னையில் மத்திய அரசுக்குப் போதுமான அளவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என அ.தி.மு.க அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், தி.மு.க செயற்குழு கூட்டம் அவசரமாக சமீபத்தில் ஸ்டாலின் உளறலுடன் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன் `காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தலைவர் கலைஞர் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்ததால்தான், இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் சூழ்நிலையைக் கொண்டு வந்தோம். இதற்கெல்லாம் தி.மு.க பாடுபட்டதை யாரும் மறந்துவிடக் கூடாது.
இப்போது இருக்கும் அ.தி.மு.க அரசு, மத்திய அரசுக்குப் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காவிரி பிரச்னையின் முக்கியத்துவத்தைக்  கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார். ஆனால், அந்த ஆலோசனை எல்லாம் கேட்காமல், அவர்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட்டு, மத்திய அரசின் மனம் கோணாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வரும் ஏப்ரல் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது’ என்றார். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் குழறிப் பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். அதற்காக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மார்ச் 29ம் தேதி கெடு முடியட்டும் என்று கூறிவிட்டு, இப்போது தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய அதே தினத்தில், தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இது ஏமாற்று வேலை. அப்போது திமுக அதிமுக இடையே கலகம் வெடிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அப்போது கிழியும் சட்டைகளை ஒட்டுப்போட கறுப்புத்துணி வழங்கப்படும் வரும் ஏப்ரல் 15ம் தேதியில், ராணுவக் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வரும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகக் போராட்டம் நடைபெறும் எனவும், அப்போதும் சண்டையில் கிழியும் சட்டைகளை ஒட்டுப்போட தொண்டர்களுக்கு கறுப்பு துணி மீட்டர் கணக்கில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ‘காவிரி தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என தமிழக அரசும், புதுவை அரசும் விளக்கம் அளிக்கின்றன. வாரியம் இல்லை என கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் கூறுகின்றன. எனவே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் காலம் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் முன்னதாக மதில் மேல் பூனை என்ற பழமொழியை ‘பூனை மேல் மதில் மேல’ என்று உளறியது போலவும், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் முன்னே’ என்று மாற்றி பிதற்றியது போலவும், விமான நிலையங்களில் பேட்டி அளிக்க கலைஞர் கருணாநிதி எழுதிய கற்பனை கதாபாத்திரங்கள் பொன்னர் சங்கர் (பொன்.ராதாகிருஷ்ணன்) உள்ளார், நடைபெற்றுக் கொண்டிருக்கும் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியார் ஆட்சியில் என எடப்பாடிக்கும் வாழப்பாடிக்கும் 75 கிலோ மீட்டர் வித்தியாசம் என தெரியாமல் உளறியது போலவும், மீண்டும் உளறிக் கொட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” பொன்னர் சங்கர் படத்தில் நடித்த பிரசாந்துடன் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு’ புகழ் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, அனைத்து கட்சிகளுடன் திரைத்துறையினர் சகிதம் பிரதமரை நேரில் சந்தித்திருக்க வேண்டும். கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே 3 மாதம் கால அவகாசம் கேட்கிறது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுககு விருப்பமில்லை. எனவே, காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், நான் தூர்தர்ஷனில் நடித்த ‘குறிஞ்சிப் பூ’  கபட நாடகம் போல் கபடி ஆட்டம் ஆடுகிறது என மென்மேலும் உளறிக் கொட்டி தெரிவித்துள்ளார்.
பகிர்