பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

அன்றிலிருந்து தினந்தோறும் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டேதான் செல்கின்றது. நாளொரு உயர்வும், பொழுதொரு அதிகரிப்புமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களை வைத்துள்ள நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பெட்ரோல் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, இதேபோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

உள்ளூர் வரிகள் உட்பட தலைநகர் டெல்லியில், பெட்ரோல் விலை 73 ரூபாய் 73 காசுகளாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அதிக விலையாக இது உள்ளது.

டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரு லிட்டர் 64 ரூபாய் 58 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

தெற்காசிய நாடுகளில் அதிக விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படுவது இந்தியாவில் மட்டுமே, என தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து பிரதமர் மோடி நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் காவிரி விவகாரம் தீயாய் எரிந்து கொண்டுள்ளது. உணர்ச்சி வசப்பட்டு தமிழர்கள் காவிரிக்காக தீக்குளிப்பதை தடுக்கவே பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளோம். எங்களது இந்த நல்ல மனதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பகிர்