காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு அவர்களை விடுதலை செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பின்னர், ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.
இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: இன்று நான் பழமொழி ஏதும் சொல்லி சிக்கலில் மாட்டப் போவதில்லை. தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஏப்.,5ல் ரயில் மற்றும் பஸ்களை மறித்து போராட்டம் நடத்துவோம். எங்களை கைது செய்தாலும் சிறையில் அடைக்கமாட்டார்கள். நம்மை அடைக்க சிறையில் இடமில்லை. மாலையில் விடுதலை செய்தாலும், மீண்டும் நாளை போராட்டம் நடத்துவோம். போராட்டம் எங்கு நடக்கும். எப்போது நடக்கும் என கூற மாட்டோம். தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும். போலீசார் வந்து கைது செய்கிறோம் எனக்கூறும் வரை யாரும இங்கிருந்து யாரும் நகர வேண்டாம் என்றார். தொடர்ந்து, அவர்களுடன் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நடத்திய ஸ்டாலின், திருநாவுகரசர், திருமாவளவன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனை கண்டித்து சென்னையில் பல இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வழக்கம் போல் கண்துடைப்பு சமாசாரமாக சில மணி நேரத்திற்கு பிறகு கைதானவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.
முழு அடைப்பு அன்று சன் டிவி ,கலைஞ்சர் டிவி, திருமாவின் வெளிச்சம் டிவி அன்றைய தினம் 8 மணி நேரம் நிறுத்தப்படுமா  செய்திப் பிரிவு சேனல்கள் தவிர அணைத்து சேனல்களும் நிறுத்தப்படுமா? என்று கப்சா நிருபரின் கேள்விக்கு, தமிழகம் முழுக்க போராட்டம் நடக்கும்.” என்று போராட்டத்தின் போது தெரிவித்தார் ஸ்டாலின்.” பொங்கல் தீபாவளி நாட்களை கூட விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று விளம்பரப்படுத்தி சன் டிவி கே டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் படங்களையே நிறுத்த மாட்டோம். எவனோ ஒரு ஏழை விவசாயிக்கு எங்கள் விளம்பர வருமானத்தை தாரை வார்க்க முடியும? கருப்பு கொடி மட்டும் அல்ல…சட்டையை கிழித்து காண்பிப்போம்…வேட்டியை கழட்டி வீசுவோம்…..காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைத்து தமிழகத்தில் திமுகவின் ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பால், துன்பப பட போவது, தமிழ் மக்களும், தமிழ் வியாபாரிகளும், தமிழர் தொழிற்சாலைகளும் தான்.
இந்த அடைப்பால் பிரபலமாவது அரசியல் கட்சிகள் தான். இதுவும் ஒரு அமைப்பே. இந்த அமைப்பும் சம்பந்தபட்ட மாநிலங்களின் சாதக பாதகங்களை ஆராய்ந்து தான் முடிவுகளை எடுக்கும். இந்த அமைப்பின் மூலமாக தமிழகத்திற்கு அதிக தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறுவது மக்களுக்கு ஒரு செயற்கையான அல்லது போலியான நம்பிக்கையை தரும் எண்ணம் தான் என்பது தான் நிர்தட்சயண்யமாண உண்மை” என்று உண்மையை போட்டு கிழி கிழியென கிழித்தார்
பகிர்