திருச்சியில் டெல்டா பகுதி விவசாயிகள் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

தினகரன் ஆதரவோடு திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட டெல்டா விவசாயிகள்

இதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆதரவு தெரிவித்ததோடு முற்றுகை போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

அவர் மட்டுமின்றி அவரது அமைப்பை சேர்ந்த டெல்டா பகுதி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

தனியார் விடுதியில் இருந்து தனது வாகனத்தில் புறப்பட்ட தினகரன் போராட்டம் நடந்த இடத்துக்கு வந்ததும் அவரது ஆதரவாளர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களையும், முழக்கங்களை எழுப்பினர்.

தினகரன் ஆதரவோடு திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட டெல்டா விவசாயிகள்

அதனை தொடர்ந்து விமான நிலையத்தை முற்றுகையிட அவர்கள் பேரணியாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த தடுப்பரண்கள் பல வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் விமான நிலைய நுழைவு வாயில் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

தினகரன் ஆதரவோடு திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட டெல்டா விவசாயிகள்

ஆனாலும், தொடர்ந்து முன்னேறிய விவசாயிகளும், அமமுக தொண்டர்களும் தடுப்பரண்களை தாண்டி உள்ளே நுழைய முற்பட்டனர்.

இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே பத்து நிமிடங்களுக்கு மேல் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே டி.டி.வி. தினகரனும் நுழைவு வாயிலை நோக்கி முன்னேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்தப் போராட்டத்தால் திருச்சி – புதுக்கோட்டை சாலையில் சுமார் ஆறு கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் திருவெறும்பூரில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் உடைக்கப்பட்டது போல இங்கும் உடைக்கப்படுமோ என்ற சந்தேகத்தில் விமான நிலையப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்களை கைது செய்ய வந்த வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்கள் நிறுத்தியும், மாற்று பாதையில் திருப்பியும் விடப்பட்டன.

ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டிய தினகரன், விவசாயிகள் நடத்தும் விமான நிலைய முற்றுகைப் போராட்டத்தில் மட்டும் கலந்துகொள்கிறார். இப்படியிருந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது?’ எனக் கொந்தளிக்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பினர். இதுதொடர்பாக, நேற்று அறிக்கை வெளியிட்ட தினகரன், ‘ பழனிசாமியின் அரசு உண்மையான அழுத்தத்தை வழங்காத காரணத்தால் காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமையாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தமிழகத்துக்குச் செய்துவரும் துரோகத்தால், தன்னெழுச்சி போராட்டங்கள் தொடங்கிவிட்டன. இதில், ஒருபகுதியாக டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் முன்னெடுக்கும் விமானநிலைய முற்றுகை, ரயில் நிலையம், சாலை மறியல், கடையடைப்பு ஆகிய போராட்டங்களில் பங்கேற்க இருக்கிறோம். நாளை (3.4.18) காலை 11 மணியளவில் திருச்சி விமானநிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கிறேன். தமிழகத்தின் உணர்வுபூர்வமான இப்போராட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், அனைத்து தரப்பு பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ” காவிரி பிரச்னையில் தீவிரமான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவில்லை. விவசாயிகள் சங்கம் நடத்தும் போராட்டத்தில் ஒருவராக நிற்பது எப்படி சரியானதாக இருக்கும்? மாநிலம் முழுவதும் அமைப்புரீதியாக ஆள்கள் இல்லாததால், ‘பலம் இவ்வளவுதான் என வெளிப்பட்டுவிடுவோம்’ என நினைக்கிறார் தினகரன். தமிழ்நாடு முழுவதும் நெட்வொர்க் இல்லாததுதான் குறையாக இருக்கிறது. புதிய அமைப்பாக இருப்பதால், சில மாவட்டங்களில் இளைஞர்கள் கூடுகிறார்கள். அண்ணா தி.மு.கவில் இருந்து, எங்கள் அமைப்பில் கலந்துகொண்டு போராடுவதற்குத் தொண்டர்கள் யாரும் தயாராக இல்லை. கரூரில் உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செந்தில்பாலாஜியால் அரசியல் செய்ய முடிகிறது. டெல்டா மாவட்டங்களிலும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகப் போராட முடிகிறது. மற்ற மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை.

காவிரி பிரச்னையில் தி.மு.க நிர்வாகிகள் பெரும் திரளாகக் கைதாகிறார்கள். மாநிலம் முழுவதும் அமைப்புரீதியாக செல்வாக்கு இல்லாத வேல்முருகன் கட்சித் தொண்டர்கள்கூட தீவிரமாகப் போராடுகிறார்கள். எங்கள் கட்சித் தொண்டர்கள் யாரும் கைதாகவில்லை. தஞ்சை உண்ணாவிரதம், திருச்சி, மேலூர் ஆகிய இடங்களில் ஓரளவுக்குக் கூட்டத்தைக் கூட்டி தினகரனால் பேச முடிந்தது. தஞ்சை உண்ணாவிரதப் போராட்டத்தில் டெல்டாவே ஸ்தம்பித்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு தினகரன் கொண்டு சென்றிருக்க வேண்டும். மத்திய அரசை உலுக்கும் வகையில் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு அவர் தவறிவிட்டார். ஆர்.கே.நகர் வெற்றிக்குப் பிறகு பரவலாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தொடர்ச்சியாக கூட்டம் நடத்தப்படாததால்தான் சம்பத் வெளியேறினார். கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தெரியாமல், தலைமை தயங்கிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்க வேண்டும். காவிரி விவகாரம், கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆகியவற்றின் மூலம், கட்சியின் பலவீனம் வெளிப்பட்டிருக்கிறது. இந்தநிலை நீடித்தால் இப்படியொரு அமைப்பு இருப்பதே மக்களுக்குத் தெரியாமல் போய்விடும்” என்றார் ஆதங்கத்துடன்.

பகிர்