தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது பழைய குரல் வளம் வேண்டி சீர்காழியில் குடும்பத்தோடு வழிபாடு நடத்தினார். நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயம். இங்கு குரல் பாதிப்பு உள்ளோர் மனமுருக வணங்கினால், அந்த பாதிப்பு நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுள்ளது. குறிப்பாக இங்கு வழங்கப்படும் தேன் பிரசாதத்தில் மகத்துவம் உள்ளது என்கிறார்கள் பக்தர்கள். இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினரோடு ஓசைநாயகி அம்மன் ஆலயத்தில், வழிபாடு நடத்தினார். குரல் வளம் வேண்டி அவர் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வழிபாட்டிற்கு பிறகு கொழ கொழ குரலில் விஜயகாந்த் கப்சா நிருபருக்கு அளித்த பேட்டி: “70 ஆண்டுகளாக தெலுகு திராவிடன் கருணாநிதி கர்ஜித்து போல் நானும் வசனம் பேசி தமிழக முதல்வராவேன். எனது ஹிட் படம் .’அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் நடிச்சதில் இருந்து நான் அம்மன் பைத்தியமாவே அலையுறேன். தமிழக மக்களுக்காக நாக்க மடிச்சு கடிச்சு கடிச்சு, ஊடகங்களை பார்த்து காறித் துப்பி, எனக்கு பேச்சே வராம போயிருச்சு, தமிழ் மக்களுக்காக வாயை இழந்தவன் இந்த கேப்டன். எனக்கு யாரோ செய்வினை செய்து குரலை கட்டி வைத்துவிட்டார்கள். இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமான்னு கேட்ட வாயால் பேசமுடியவில்லையே? ‘சத்ரியன்’ படத்துல வர்றபழைய பண்ணீர் செல்வமா திரும்பி வர வேண்டும் என்று தான் இந்த பூஜை புனஸ்காரமெல்லாம். மக்களே! எனது கெட்ட நேரம் மக்களுக்கு நல்லது செய்யும் காலத்தில் உடல் ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை, விரைவில் குணமடைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை எனது படங்களில் துவம்சம் செய்தது போல், இந்த வீணாய்ப்போன ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் இருவரையும் எனது லெக் பைட்டால் புரட்டி எடுப்பேன். எனது அரசியல் ஜூனியர்கள் கமல் ரஜினியை ராகிங் செய்யவும் குரலவளம் வேண்டியுள்ளது” ” என்று முடித்தார்.