காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஞாயிறு 8 காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை  அறவழிப் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் முடிவில் நான்கு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி வாசித்தார். (அஜித், சிம்பு நீங்கலாக) ரஜினி, கமல், நாசர், விஷால், செல்வமணி, சத்யராஜ், விக்ரம் என அனைவரும் மேடையில் இருந்த நிலையில், கூட்டத்திலிருந்த சிலர் சத்யராஜ் பேச வேண்டும் என்று முழக்கமிட்டதால் அறவழி ஆர்ப்பாட்டக் களம்  சற்று பரபரப்பானது.
அப்போது சத்யராஜ் பேசினார். “காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம், குரல்கொடுக்கத் தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள்; இல்லையேல், ஒளிந்துகொள்ளுங்கள்”  என்று ஆவேசமாக முழக்கமிட்டார். இதுகுறித்து சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் தமிழிசை, “ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என நடிகர் சத்யராஜ் பேசுகிறார். ஐ.டி ரெய்டு வந்தால் அவர்கள் பயப்படுவது தெரியும் என பகிரங்க மிரட்டல் விடுத்தார்.” என்றார். இது பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளுக்குச் செல்லக் கூடாது என வலியுறுத்தி  இன்று இயக்குநர்கள் பாரதிராஜா, சேகர், அமீர், செல்வமணி, சத்யராஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சத்யராஜ், “உண்மையான களப்போராளிகளுக்குப் பின்னால் இருக்கவே ஆசைப்படுகிறேன். நான் எல்லா விளையாட்டுக்கும் ஆதரவானவன்தான். ஆனால், காவிரிக்காக போராட்டம் நடந்துவரும்போது ஐ.பி.எல் வந்தால் சரியிருக்காது. எந்த ஐ.டி ரெய்டுக்கும் நான் அஞ்சமாட்டேன். தமிழிசை அக்கா என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம். நான் வெறும் அப்பா மற்றும் அடிமை கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் நடிப்பவன். அரசியலுக்கு வரும் விருப்பம் எனக்கு இல்லை. 40 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை வருமான வரித்துறை சோதனை வந்ததில்லை. ஒரு நடிகனால் அந்த அளவிற்கு இறங்கிப் போராட முடியாது. நடிகனின் மனநிலை என்னவென்று எனக்கு தெரியும் 40 ஆண்டுகளாக நான் திரைத்துறையில் இருப்பதால் இதை உறுதியாக சொல்ல முடியும் என்று சைக்கிள் கேப்பில் ரஜினியை நக்கலடித்தார்.
அப்போது அங்கிருந்த கப்சா நிருபர் வெகுண்டெழுந்து: “வருமானவரித்துறை யாரு தமிழையோட புருஷனா நீங்க நெனச்சப்ப யார்கிட்ட வேணும்னா சோதனை நடத்த? சத்யராஜே, என்னது தமிழருக்கு போராடுறீயா எப்படி இந்த பாஹுபலி படம் வந்தப்ப மன்னிப்பு கேட்டியே அது மாதிரியா? என்று டென்ஷனானார். பின்னர் தொடர்ந்து கூறும்போது: தமிழ் திரை உலகத்தினர் இன்று நடத்திய ‘அரைநாள் கூத்து’ போராட்டத்தில் புதியதாக மவுன அறவழிப் போராட்டத்தை கடைபிடிப்போம் என எவரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தது பல கேள்விகளை எழுப்புகிறது. 2008-ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விவாதத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தது. அதைக் கண்டித்து அப்போது சென்னையில் திரை உலகத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், கன்னடர்களை உதைக்க வேண்டும் என்றார். அதே காலகட்டத்தில் ரஜினி நடித்த குசேலன் திரைப்படம் ரிலீஸானது. கன்னடர்களை விமர்சித்த ரஜினிகாந்தின் குசேலனை திரையிட விடமாட்டோம் என கன்னட அமைப்புகள் மிரட்டின. இதனையடுத்து கன்னடர்களிடம் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார். இதற்கு சத்யராஜ் போன்றோர்கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பாகுபலி-2 படம் வெளியீட்டின் போது கடந்த ஆண்டு சத்யராஜையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். வேறுவழியே இல்லாமல் சத்யராஜும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார். இதன்பின்னரே பாகுபலி-2 கர்நாடகாவில் ரிலீஸ் ஆனது. நாங்களும் போராட்டம் நடத்தினோம் என காட்டுவதற்காகவே இந்த அரைநாள் கூத்து நடந்தேறியது. அத்துடன் இம்முறையும் ரஜ்னிகாந்த் போன்றவர்கள் ஏதாவது பேச போய் கன்னடர்கள் மீண்டும் கொந்தளிக்க வேண்டுமா? என கருதியோ என்னவோ ‘மவுன அறவழி’ போராட்டம் என அறிவித்தனர். ஆனால் யாரும் மவுனமாக இருக்கவில்லை. ஒரே அரட்டை கச்சேரிதான். சத்யராஜை பொருத்தவரை மார்க்கெட் போன அப்பா நடிகர் அவர் காலா போல் அல்ல, கட்டப்பா போல் தேவை என்றுவந்தால் மோடி காலையும் அமுக்குவார்” என்றார்.
பகிர்