காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும், திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது. இன்று காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையம் இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், அமீர், கவுதமன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கருப்பு சட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தொண்டர்கள் ராட்சத ஹோர்டிங்குகள் மேல் ஏறி நின்று கருப்பு கொடிகள் காண்பித்தும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ‘மோடியே திரும்பிப் போ’ என முழக்கங்கள் எழுப்பினர். விமான நிலையத்தில் அவர்கள் நுழைய முயன்றதால் அங்கிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றனர்.  இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கருப்பு உடையணிந்து பிரதமர் மோடிக்கு எதிரான போராட்ட மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் என திமுக தரப்பில் ஒரு புகைப்படம் பரப்பபடுகிறது..சென்னை ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனும் கைது செய்யப்பட்டார். அதேபோல், தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், கருணாநிதி, ஸ்டாலின், திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்துள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது. அவரது இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, திமுக தலைவர் கருணாநிதி கருப்பு உடையணிந்து போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். உடல்நலக் குறைபாட்டால் சென்னைக் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்கிறார். நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அவர் தவிர்த்து வருகிறார். சென்னை வரும் பல்வேறு தலைவர்கள் அவரைச் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தநிலையில், கடலூர் கூட்டத்துக்குச் செல்லும் முன் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியிடம் விடைபெறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், `திருவாரூரிலிருந்து கடலூருக்கு அப்பா நடந்து வந்து கொண்டிருக்கிறார். கடலூரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். எல்லாப் பொதுக்கூட்டத்திலேயும் அப்பா உங்களைப் பத்திதான் பேசுறார். டிவில பார்த்தீங்களா? அடுத்த முறை மோடி வரும்போது, உங்களுக்கு கருப்பு சட்டை போட்டு சோளக்கொள்ளை பொம்மையாட்டம் ராட்சத பலூனில் பறக்கவிட்டு அனுதாபத்தை பெறுவோம் தாத்தா’ என்று உதயநிதி கூற, கருணாநிதி சிரித்தபடியே அதைப் புரிந்துகொண்டது போல் தலையசைக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பகிர்