காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து டிஸ்மிஸ் ஆன வங்கி அதிகாரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூரில் தனியார் வங்கி ஒன்றில் துணை மேலாளராக பணிபுரிந்த விஷ்ணு நந்தகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டார். அதில், ”நல்லவேளை அந்த சிறுமி கொல்லப்பட்டுவிட்டார். ஒருவேளை அவர் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறினாள், இந்தியாவுக்கு எதிராக மனித வெடிகுண்டாக மாறுவாள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு கேரளா மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விஷ்ணு பணியாற்றும் வங்கிக்கு ஏராளமானோர் மின்னஞ்சல் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். விஷ்ணுவுக்கு எதிராக ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி கண்டனம் தெரிவிக்கும் வகையில் உருவானது. இந்நிலையில், அந்த தனியார் வங்கி, விஷ்ணுவை வேலையில்இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் பல்வேறு அமைப்புகள், தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில், பனங்காடு போலீஸார் விஷ்ணு மீது ஐபிசி 153ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கப்சா நிருபர் விசாரித்ததில், இது இச்சம்பவத்தில் முக்கிய கொலையாளிகளை பற்றிய கவனத்தை திசை திருப்பவும் #justicaforasifa என்ற ஆஷ்டாகை ஒழிக்கவும் பாஜக செய்துள்ள ஏற்பாடு என்று தெரிகிறது. அரசியல் ஆதாயத்துக்காக முதலாளி ஒருத்தனை போட்டுத்தள்ளிவிட்டு டிரைவர், வேலைக்காரனை சரண் அடைய சொல்வது போல் கொலையாளிகளை கைது செய்வதை விட்டுவிட்டு, அப்பாவி வங்கி மேலாளரை வேலை இழக்க செய்தும், சிறையில் அடைத்தும் நாடகம் ஆடுகிறடு மத்திய பாஜக. முன்பு டில்லி பேருந்து வங்கொடுமை நிர்பயா வழக்கில் குற்றவாளி மைனை என்பதால் 10000 பணமும், தையல் மிஷினும் கொடுத்தார்கள். இப்போது இந்த குற்றவாளிக்கு என்ன கொடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. திகார் சிறையில் உள்ள பல பாலியல் குற்றவாளிகள், ஆரம்ப நிலைப் பள்ளி படிப்பைத் தாண்டாதவர்கள். மூன்றாவது, நான்காவது வகுப்பைக்கூட தாண்டாதவர்கள்.
இதுவரை இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் குற்றங்கள் :
1. டில்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் கற்பழித்து பிறப்புறுப்பில் இரும்பு ராடை திணிப்பு
2. சட்டீஸ்காரில் கடந்த ஜனவரி 21ந்தேதி மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடந்து வந்த வீடு கட்டும் பணியில் 12 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் ஈடுபட்டு இருந்துள்ளனர்.  அங்கு வந்த அர்ஜூன் யாதவ் என்ற வாலிபர் சிறுமியை பாலியல் வன்முறை செய்து விட்டு தப்பியோடி விட்டான்.
3. ஹரியாணாவில் தமது வளர்ப்புத் தந்தையால் வல்லுறவுக்கு ஆளான 10 வயதுப் பெண் ஒருவர் கருக் கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதித்தது. அவர் சுமார் 20 வாரக் கருவை சுமந்துகொண்டிருதார்.
4. சென்னை, போரூர் அருகே கடந்த பிப்ரவரி மாதம் ஏழு வயது சிறுமி ஹாசினி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தஷ்வந்த் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்த சுவாதியின் கொடூர கொலையில், பெரிதும் பேசப்பட்ட விஷயம், ரயில்வே ஸ்டேஷன்களில் சிசிடிவி அமைக்கவில்லை என்பது. விநோதினி, நந்தினி, ஸ்வாதி என வரிசையாகப் பல பெண்கள் வன்முறைக்கு உயிரைவிட்டார்கள். நிர்பயாவின் மரணத்தின் வாயிலாக, பாலியல் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ‘நிர்பயா நிதியுதவி’ வழங்க அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கியது. அதேநேரம், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்குக் காலதாமதமாகத் தீர்ப்பு வழங்கியது. நாடே கொதித்துப் போராடிய இந்தத் துயரச் சம்பவங்களுக்குப் பிறகாவது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கிறதா என்று பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது. 2011-ம் ஆண்டு டெல்லியில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 572 மட்டுமே. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் டெல்லியில் மட்டும் 2,155 வழக்குகள் பதிவாகியிருந்தன. இப்படிப் பெண்களின் பாதுகாப்பு, பிரச்னைகள் மற்றும் வன்முறைகளைத் தீர்ப்பதற்காக இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், 1530 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 400 கோடி ரூபாயை வேறு சில திட்டங்களுக்காக ஒதுக்கப்போகிறது. இப்படி நிர்பயா நிதியின் மூலமாகப் பெண்களின் பாதுகாப்புக்கு நாடு முழுவதும் பல திட்டங்கள் அமலில் இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. வீடு, சாலை, அலுவலகம் என ஒவ்வோர் இடத்திலும் பாலியல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிப்பது வேதனை அளிக்கிறது.
பகிர்