ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாவிட்டால் மத்திய அரசு டிக்ஸ்னரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி பிரச்னையில் விருப்பு, வெறுப்பு பார்க்காமல் அனைவரும் ஒரே உணர்வோடு குரல்கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை என்றும் அவர் கூறினார். “ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்புப் பயணம் என்பது முற்றிலும் தோல்வி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். கருப்பு சட்டை அணிவித்து கருணாநிதி காட்சிக்கு வைத்ததும் கேவலம் என்றார். ஸ்லேவ் என்றால் அடிமை என்பது அதிமுக அமைச்சர்களுக்கு ஜெயா காலத்தில் இருந்தே அத்துப்படி.
ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் டிக்ஸ்னரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும், யுவர் ஆனார் ‘ஸ்கீம்’ என்பது ஆங்கிலமா, ஹிந்தியா, சமஸ்கிருதமா, தங்கிலீஷா என்பதில்தான் குழப்பமாம். எங்கள் தெர்மோகோல் சயின்டிஸ்ட்டை அனுப்பி குழப்பத்தைத் தீருங்கள். தமிழகத்தில் நடக்கும் தொடர் போராட்டங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். தொடர் போராட்டங்களின் காரணமாக, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் குறைய வாய்ப்பு இருப்பதாக, தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது அபத்தமானது என்றும், நமது மாநிலம் முதலீடுகள் அதிகம் பெற்று முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும், சுருட்டுவதற்கு நிறைய துறைகள் மீதமிருப்பதாகவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஆறு வாரமாக டிக்கிஷனரியை தேடிட்டு இருந்தபோது நான் டிக்கிஷனரிக்கு ஸ்பெல்லிங் என்னனு கேட்டு பக்கத்து வீட்டு எல்.கே.ஜி. பைய்யனிடம் தெரிஞ்சுகிட்டு இருந்தேன்..”என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். “ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் தான் என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். காவிரிக்காக என்றென்றும் உரிமையை காக்கும் இயக்கம் அதிமுகதான் என்ற அவர், மெரினாவில் ‘அராத்து’ வழியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசித்து முடிவெடுத்து போராட வருபவர்களை போலீசை விட்டு முட்டியைப் பேக்கும்” என்றார்.
பகிர்